II


மாபாதகந் தீர்த்த படலம்131



என்பது சிலப்பதிகாரம். அப்பாவத்தையொழிக்க வேண்டித் தீர்த்தம்
முதலியவற்றை அடைதல் முதலியன செய்யக் கருதின் அவற்றைச்
செய்யவிடாது தடுத்தே விடும். அரோ : அசை. (18)

சுற்றுமுன் பின்புறச் சூழ்ந்துதன் கொடுக்கினிற்*
பற்றிநின் றீர்க்குமா பாதகத் தாலலைந்
தெற்றினிச் செய்வதென் றாற்றலா திடருழந்
துற்றுவே+றுலகெலா மச்சமுற் றுழலுமால்.

     (இ - ள்.) முன் பின்பு உறச் சுற்றும் - முன்னும் பின்னும் பொருந்தச்
சூழும்; சூழ்ந்து தன் கொடுக்கினில் பற்றி நின்று ஈர்க்கும் - (அங்ஙனஞ்)
சூழ்ந்து தன் கொய்சகத்தைப் பிடித்து இழுக்கா நின்ற, மாபாதகத்தால்
அலைந்து - மாபாதகத்தினாலலைந்து, எற்று இனி செய்வது என்று ஆற்றலாது
இடர் உழந்து - இனி யாது செய்வதென்று கருதிப் பொறுக்கலாற்றாது
துன்பமுற்று, வேறு உலகு எலாம் உற்று அச்சம் உற்று உழலும் - தனியே
உலகமெல்லாஞ் சென்று திரிந்து அஞ்சி வருந்துவானாயினன்.

     கொடுக்கு - கொய்சகம்; ஆடையை மடித்து முன்புறந்
தொங்கவிட்டிருப்பது. பாதகத்தால் அவன் அலைந்து உழலுவான்
ஆயினான். வேறு - தனி. ஆல், அசை. (19)

உறுகணோ யாற்றநா ளுற்றுழன் றுலகெலாம்
மறுகவே திரியுமா பாதகன் வலியெலாஞ்
சிறுகுவான் சிவனருட் செயலினிற்+பாதகங்
குறுகுநாள் குறுகுநாள் கூடலைக் குறுகினான்.

     (இ - ள்.) ஆற்ற நாள் உறுகண் நோய் உற்று உழன்று - (இங்ஙனம்)
பன்னெடு நாள் மிக்க துன்பமடைந்து வருந்தி, உலகு எலாம் மறுகவே
திரியும் மாபாதகன் - உலகின்கண் கண்டோரனைவரும் மனம் இளகி
வருந்துமாறு திரியா நின்ற மாபாதகன், வலி எலாம் சிறுகுவான் - தனது
வலிமை முழுதுங் குறைந்தவனாய், சிவன் அருள் செயலினில் -
சிவபெருமானது திருவருட் செயலினால், பாதகம் குறுகுநாள் குறுகு நாள்
கூடலைக் குறுகினான் - அக்கொலைப் பாவமானது குறுகி ஒழியுநாள்
வரவே அந்நாளில் மதுரையம்பதியை அடையலாயினான்.

     உலகு என்பது உயிரையுணர்த்திற்று; உலக முழுதும் சுழன்று திரியும்
என்னலுமாம். சிறுகுவான், இறந்த கால எச்சமாயிற்று. செயலினிப் பாதகம்
என்னும் பாடத்திற்கு, செயலால் இப்பாதகம் என்று பொருள் கூறிக் கொள்க.
பாதகங் குறுகுதல் - பாவங் குறைதல். பின்னுள்ள குறுகுதல் அணுகுதல்
என்னும் பொருட்டு. குறுகுநாள் குறுகுநாள் என்றும், கூடலைக் குறுகினான்
என்றும் கூறிய ஈற்றடியின் நயம் போற்றற்பாலது; முற்று மோனையாதலுங்
காண்க. (20)      


     (பா - ம்.) * கொடுக்கிறப். +உற்றவே. +செயலினிப்.