|
(இ
- ள்.) முன் பகல் இழைத்த பாவ முதிர்ச்சியால் பிறந்து -
முற்பிறப்பிற் செய்த பாவ முதிர்ச்சியாலே பிறந்து, தந்தை தற்பகன்
ஆனவாறும் - தந்தையின் மனைவியை அடைந்த தன்மையும், தாதையை
வதைத்தவாறும் - (அது காரணமாகத்) தந்தையைக் கொன்ற தன்மையும்,
பின் பகல் அந்தப் பாவம் பிடித்து அலைத்து - பின்னாளில் அந்தக்
கொலைப் பாவம் பிடித்து வருத்த, எங்கும் தீராது - எங்குந் திரிந்து அது
நீங்கப் பெறாமல், இப்பதி புகுந்தவாறும் - இப்பதியை அடைந்த தன்மையும்,
எடுத்து உரைத்து இரங்கி நின்றான் - எடுத்துக் கூறிக் கவன்று நின்றான்.
தற்பகன்
- தந்தையின் படுக்கையைப் பெற்றவன் என்பர்; தற்பகை
என்னும் பாடத்திற்கு, தனக்குப் பகையென்பது பொருள். அலைத்து -
அலைக்க; எச்சத்திரிபு. (29)
மறப்பெரும் படிவங் கொண்டு மனத்தருள் சுரந்து நின்ற
அறப்பெருங் கருணை மூர்த்தி யழிதகை யவனைப் பார்த்தித்
திறப்பழி யாங்குச் சென்று மீங்கன்றித் தீரா தென்றக்
கறைப்பழி தீரும் வண்ணங் கருதியோ ருறுதி கூறும். |
(இ
- ள்.) மறம் பெரு படிவம் கொண்டு - (புறத்தில்) மறத்
தொழிலையுடைய பெரிய வேட்டுவ வடிவங் கொண்டு, மனத்து அருள்
சுரந்து நின்ற அறப்பெருங் கருணை மூர்த்தி - அகத்தின்கண் அருள் ஊறி
நின்ற அறவுருவாகிய பேரருட் பெருமான், அழியதகையவனைப் பார்த்து -
அந்த அழிதகைமையுடையவனை நோக்கி, இத் திறப்பழி - இக்கொடிய
பழியானது, யாங்குச் சென்றும் ஈங்கு அன்றித் தீராது என்று - எங்கே
செல்லினும் இப்பதியிலன்றி நீங்காது என்று கூறி, அக்கறைப் பழி தீரும்
வண்ணம் கருதி ஓர் உறுதி கூறும் - அவ்வடுவாகிய பழி தீரும் வகையைக்
கருதி ஓர் உபாயம் கூறியருளுவான்.
இறைவன்
கொள்ளுங் கோலங்களில் மறத்தன்மையுடையன
போல்வனவும் அருளுருவங்களே என்பது தோன்றக் கூறியவாறு; "வேகியா
னாற்போற்செய்த வினையினை வீட்ட லோரார்" எனச் சிவஞானசித்தி கூறுவது
காண்க. திறப்பழி - ஏனைப் பழிகள் போல்வதன்றி வேறாகிய கொடும்பழி.
ஈங்கன்றி யாங்குச் சென்றும் தீராது எனக் கூட்டுக. கறை - நீங்காது நிற்கும்
மறு. (30)
வருதிநின் னாமஞ் சொன்னோர் வருக்கமு நரகில் வீழக்
கருதிநீ செய்த பாவங் கழிப்பவ ரெவர்யா நோக்கந்
தருதலா லெளிதிற் றீரச் சாற்றுது மையங் கையேற்
றொருபொழு துண்டி யீச னுறுதவ* ரேவல் செய்தி.
|
(இ
- ள்.) வருதி - வருவாய், நின் நாமம் சொன்னோர் வருக்கமும்
நரகில் வீழ - உனது பெயரைக் கூறினவரின் மரபிலுள்ளோரும் நரகில்
(பா
- ம்.) * ஈசனுற்றவர்.
|