|
சித்தம் அன்பு உடைய
வேடத் திருவுருக் கொண்ட கொன்றைக் கொத்தவன்
உரைத்தான் - உள்ளத்தில் அன்புடைய வேடத் திருவுருவங் கொண்ட
கொன்றைப் பூங்கொத்தினையணிந்த சோமசுந்தரக் கடவுள் கூறியருளினன்;
கேட்டுக் கொடிச்சியாய் இருந்த அம்மை இதனைக் கேட்டு வேட்டுவிச்சியாய்
இருந்த உமையம்மையார், மத்தம் வன் கரித் தோல் போர்த்த மறவனை
வினவுகின்றாள் - மத மயக்கத்தையுடைய வலிய யானையின் தோலைப்
போர்த்தருளிய வேடனை வினவுகின்றார்.
இத்தவநெறி
- மேல் இரு செய்யுளிலும் உண்டி, ஏவல் செய்தி,
அருத்தி, செய்தி எனக் கூறியவை. உடைய, கொண்ட என்னும்
பெயரெச்சங்களைக் கொத்தவன் என்பதன் விகுதியோடு தனித்தனி
கூட்டுக. கொடிச்சி - குறிஞ்சித் தலைமகள்; வேட்டுவனுக்குப் பெண்பால்.
(33)
ஐயவிக் கொடியோன்
செய்த பாவத்துக் களவில் காலம்
வெய்யநா லேழு கோடி நரகிடை வீழ்ந்தா னேனும்
உய்வகை யிலாத பாவி யிவனுக்கென் னுய்யுந் தேற்றஞ்
செய்வகை யென்று கேட்பச் செங்கண்மால் விடையோன் செப்பும்.
|
(இ
- ள்.) ஐய - ஐயனே, இக்கொடியோன் - இத்தீயவன், செய்த
பாவத்துக்கு - தான் செய்த பாவத்திற்கு, அளவு இல் காலம் - அளவிறந்த
காலம் வரையும், வெய்ய நாலேழு கோடி நரகு இடை வீழ்ந்தானேனும் -
கொடிய இருபத் தெட்டுக்கோடி நரகின் கண்ணும் வீழ்ந்தானாயினும்,
உய்வகை இலாத பாவி - பிழைக்கும் வழி இல்லாத பாவியாவான்;
இவனுக்கு உய்யும் தேற்றம் செய்வகை என் என்று கேட்ப இவனுக்கு
உய்யும் தெளிவினைச் செய்யும் வகை என்னை என்று கேட்க,
செங்கண்மால் விடையோன் செப்பும் -சிவந்த கண்களையுடைய
திருமாலாகிய இடபவூர்தியையுடைய பெருமான் கூறியருளுவான்.
கொடியோன்
பாவியாவான் இவனுக்குச் செய்வகை என்னென்று
கேட்பச் செப்பும் என முடிக்க. உய்யுந் தேற்றம் - பிழைக்கும் துணிவு;
கடைத்தேற்றம். (34)
அடுபழி யஞ்சா நீச ராயினு நினைக்கி னச்சம்
படுபழி அஞ்சான் செய்த பாதகத் தொடக்குண் டெங்கும்
விடுவகை* யின்றி வேறு களைகணு மின்றி வீயக்
கடவனைக் காப்ப தன்றோ காப்பென்றான் கருணை மூர்த்தி. |
(இ
- ள்.) கருணை மூர்த்தி - அருளேயுருவாகிய சோமசுந்தரக்
கடவுள், அடுபழி அஞ்சா நீசர் ஆயினும், கொல்லும் பழிக்கு அஞ்சாத
புலையராயினும் (அவரும்), நினைக்கின் அச்சம் படுபழி அஞ்சான் செய்த
- நினைத்தால் அச்சமுண்டாகும் கொடும் பழியை அஞ்சாது செய்த,
பாதகத் தொடக்குண்டு - மாபாதகத்தாற் கட்டப்பட்டு, எங்கும் விடுவகை
இன்றி - எவ்விடத்தும் தீரும் வகையில்லாமல், வேறு களைகணும் இன்றி -
வேறு
(பா
- ம்.) * விடுவதை.
|