|
(இ
- ள்.) பொன் நகரான் காலம் தாழ்த்து உனை அருச்சித்து
அயர்ச்சியொடும் போனவாறும் - பொன்னுலகை யுடையவனாகிய இந்திரன்
காலந் தாழ்த்து உன்னைப் பூசித்தலால் மனக் கவலையோடு போன
தன்மையும், என் என யான் வினவியதும் - (அவ்வயர்ச்சிக்குக் காரணம்)
யாது என யான் வினவியதும், வலாரி இறை கொடுத்ததும் - இந்திரன் விடை
இறுத்தது, அவ்விறைக்கு நேர் - அவ்விடைக்கு நேராக, யான் பின்னை
வினாயதும் - யான் பின்பு வினாவியதும், அவன் சொல் வழி உன்னைச்
சோதித்த பெற்றி தானும் - (அதற்கு விடையாக) அவன் கூறிய நெறியினின்று
நின்னைச் சோதித்த தன்மையும் ஆகிய இவை யனைத்தும், முன்னவனே உன்
அருளால் என் பிணிக்கு மருந்து ஆகி முடிந்தது - முதல்வனே! நின்
திருவருளால் எனது நோய்க்கு மருந்தாய் முடிந்தது.
முடிந்தது
: பன்மையிலொருமை. தான், அன்று, ஏ என்பன அசைகள்.
(23)
ஆறுமதி முடியணிந்த
வருட்கடலே வயிற்றுநோ யன்றி
மேனாள்
மாறுபடு மிருவினையு மலவலியுங் கெடவீட்டின் வழியும்
பெற்றேன்
வேறினிமந் திரமென்னை மணியென்னை மருந்தென்னை
மெய்மை யாகத்
தேறுமவர்க் கிப்புனித தீர்த்தமே பிணியனைத்துந் தீர்ப்ப
தன்றோ. |
(இ
- ள்.)
ஆறுமதி முடி அணிந்த அருட் கடலே - கங்கையையும்
சந்திரனையும் முடியிற் றரித்த கருணைக் கடலே, வயிற்று நோய் அன்றி -
என் வயிற்று நோயே அல்லாமல், மேல் நாள் மாறுபடும் இரு வினையும் மல
வலியும் கெட வீட்டின் வழியும் பெற்றேன் - அனாதியே என்னுடன் மாறுபட்ட இருவினைகளும்
ஆணவ மலத்தின் வலியும் கெட வீட்டு நெறியையும்
அடைந்தேன்; வேறு இனி மந்திரம் என்னை மணி என்னை மருந்து என்னை
- இனி வேறு மன்திரம் எதற்கு மணி யாதினுக்கு மருந்து எதன் பொருட்டு,
மெய்மையாகத் தேறுமவர்க்கு - உண்மையாகத் தெளிய வல்லோருக்கு,
இப்புனித தீர்த்தமே - இந்தத் தூய தீர்த்தமே, பிணி அனைத்தும் தீர்ப்பது -
நோய் முற்றும் போக்குவதாகும்.
மந்திரம்
மணி மருந்து என்பன நோய் தீர்த்தற்குரியன; இறைவன்
சார்பானே எல்லா நோயும் நீங்குமென்றார்.
| "மந்திரமும்
தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்" |
என ஆளுடைய
அரசுகள் கூறுமாறுங் காண்க. என்னை - எற்றிற்கு
என்னும் பொருட்டு. (24)
[- வேறு]
அடியனேன் முன்னஞ் செய்த வபராத மிரண்டுந் தீரும்
படிபொறுத் தருள்வா யென்று பன்முறை பரவித் தாழ்ந்து
மடிவிலா மகிழ்ச்சி பொங்க வரங்களுஞ் சிறிது வேண்டிக்
கடியதன் னகரம் புக்கான் குடதிசைக் காவல் வேந்தன். |
|