கோளுடைக் குரவ னேபோற் சித்தனைக் குறுகிச் சித்தா
காளையா நீயுஞ் சாலக் கழியமூப் படைந்த யாமும்
வாளம ராடி நந்தம் வலிகளு மளந்து காண்டும்
நாளைவா வருது நாமு நகர்ப்புறத் தொருசா ரென்றான். |
(இ
- ள்.) கோள் உடைக் குரவனே போல் சித்தனைக் குறுகி -
வலியமைந்த அவ்வாளாசிரியனைப் போலத் திருவுருக் கொண்டு சித்தனை
அடைந்து, சித்தா - சித்தனே, காளை ஆம் நீயும் - காளைப் பருவத்தினை
யுடைய நீயும், சாலக் கழிய மூப்பு அடைந்த யாமும் - மிக்க மூப்பினையுற்ற
யாமும், வாள் அமர் ஆடி - வாட்போர் புரிந்து, நம் தம் வலிகளும்
அளந்து காண்டும் - நம் ஆற்றல்களையும் வரை செய்து காண்போம்,
நகர்ப்புறத்து ஒரு சார் நாளைவா நாமும் வருதும் என்றான் - நகரின்
புறத்தே ஒரு பக்கத்தில் நாளை நீ வருவாயாக நாமும் வருவோம் என்று
கூறியருளினன்.
கோள்
- வலிமை. சாலக்கழிய, ஒரு பொருட் பன்மொழி; அளவின்றி
மூத்த என்றபடி. 'காளையா நீயும் சாலக்கழிய மூப்படைந்த யாமும்' என்றது
போரின் கண் அவனுக்கு ஊக்கத்தையும் மானத்தையும் எழுப்ப வேண்டி
யென்க. குமரன் வலியையும் விருத்தன் வலியையும் காண்போமென்றான்.
காண்டும், வருதும் என்பன தன்மைப் பன்மையெதிர்கால முற்றுக்கள். (11)
நாதனாங் குரவன் கூற நன்றென வுவந்து நாலாம்
பாதக னதற்கு நேர்ந்தான் படைக்கலக் குரவன் மீண்டு
பேர்தரு மளவில் வையம் புதையிருள் வெள்ளத் தாழ
ஆதவன் வைய முந்நீர் வெள்ளத்து ளாழ்ந்த தம்மா. |
(இ
- ள்.) நாதன் ஆம் குரவன் கூற - இறைவனாகிய வாளாசிரியன்
கூற, நாலாம் பாதகன் - நாலாவது பாதகமாகிய காமத்தை மேற்கொண்ட
சித்தன், நன்று என உவந்து அதற்கு நேர்ந்தான் - நல்லது என்று மகிழ்ந்து
அதனுக்கு உடன்பட்டான்; படைக்கலக் குரவன் மீண்டு போதரும் அளவில்
- வாளாசிரியன் மீண்டு போகும் போது, வையம் புதை இருள் வெள்ளத்து
ஆழ - புவியானது நிறைந்த இருள் வெள்ளத்தில் முழுகும்படி, ஆதவன்
வையம் - சூரியன் தேரானது. முந்நீர் வெள்ளத்துள் ஆழ்ந்தது - கடல்
வெள்ளத்தில் முழுகியது.
ஐம்பெரும்
பாவங்களையெண்ணுமிடத்துக் காமம் நான்காம் எண்ணு
முறைக்கண் நிறுத்தப்படுதலின் 'நாலாம் பாதகன்' என்றார். வையம் - புவி,
தேர். அம்மா : அசை. (12)
ஆசினன் குரவற்
கின்னா வாற்றினோன் பாவம் போல
மாசிரு டிணிந்த* கங்குல் வலிகெட வடிவாள் விஞ்சைத்
தேசிக னொருவ னன்னான் றிணியுடல் சிதைப்பத் தீட்டுங்
காய்சின வாள்போற் கீழைக் கல்லிடை முளைத்தான் வெய்யோன்.
|
(பா
- ம்.) * மாசிரு டணிந்த.
|