|
(இ
- ள்.) ஆசு இல் நன்குரவற்கு இன்னா ஆற்றினோன் பாவம் போல - குற்றமில்லாத
நல்ல குரவனுக்குத் துன்பஞ் செய்த சித்தனது பாவச்
செறிவுபோல, மாசு இருள் திணிந்த கங்குல் வலிகெட - கரிய இருள் நிறைந்த
இரவின் வன்மை கெடுமாறு, வடிவாள் விஞ்சைத் தேசிகன் ஒருவன் - கூரிய
வாள்வித்தை கற்பிக்கும் குரவனாகிய ஒப்பற்ற இறைவன், அன்னான் திணி
உடல் சிதைப்பத் தீட்டும் காய்சின வாள் போல் - அச்சித்தனது வலிய
உடலைச் சேதிப்பதற்குத் தீட்டுகின்ற காயும் சினத்தினையுடைய வாட் படை
போல, வெய்யோன் கீழைக்கடலிடை முளைத்தான் - ஆதித்தன் கிழக்கு
மலையிலே தோன்றினான்.
இருள்
நிறைந்தது பின் அவ்விருளின் வலிகெட வெய்யோன்
முளைத்தான் என்றுரைத்துக் கொள்க. தேசிகன் வடிவுகொண்டு வந்த
ஒப்பற்றவன். (13)
நன்றியைக் கொன்று தின்றோ னாயக னாணைக் கஞ்சும்
வன்றிற லரிமா னூர்தித் தெய்வதம் வழிபட் டேத்தி
வென்றிவாள் பரவிக் கச்சு வீக்கிவாள் பலகை யேந்திச்
சென்றுவா ளுழவன் சொன்ன செருக்களங் குறுகி னானே. |
(இ
- ள்.) நன்றியைக் கொன்று தின்றோன் - குரவன் செய்த உதவியை
முற்றுங் கெடுத்தவனாகிய சித்தன், நாயகன் ஆணைக்கு அஞ்சும் -
சிவபெருமான் ஆணைக்கு அஞ்சும், வன்திறல் அரிமான் ஊர்தித் தெய்வதம்
வழிபட்டு ஏத்தி - மிக்க வலியினையுடைய சிங்கவூர்தியையுடைய துர்க்கையை
வணங்கித் துதித்து, வென்றிவாள் பரவி - வெற்றி பொருந்திய வாட்படையைத்
துதித்து, கச்சு வீக்கி வாள் பலகை ஏந்திச் சென்று - கச்சினைக் கட்டி
வாளையும் கேடகத்தையுங் கையிலேந்திச் சென்று, வாள் உழவன் சொன்ன
செருக்களம் குறுகினான் - வாளாசிரியன் சொன்ன போர்க்களத்தை
அடைந்தான்.
ஆசிரியன்
செய்த நன்றியை மறந்து அவனுக்குப் பெருந்தீங்கியற்ற
லானான் ஆகலின் 'நன்றியைக் கொன்று தின்றோன்' என்றார். நன்றி
கோறல் உய்தியில்லாத பாவமென்பது,
"எந்நன்றி கொன்றார்க்கு
முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு" |
என்னுந் திருக்குறளாற்
பெறப்படும். கொற்றந்தரும் தெய்வமாயினும்
இறைவனாணைக்கஞ்சு மதனை வழிபட்டு இறைவனை வெல்லுமாறெங்ஙனம்
என்பார் 'நாயகனாணைக்
கஞ்சும்.................தெய்வதம் வழிபட்டு' என்றார்.
வன்றிறல், ஒரு பொருட் பன்மொழி. வாளுழவன் - வாளாகிய ஏரால்
உழுதுண்போன்; வாளாசிரியன்; "வில்லேருழவர்" என்பது திருக்குறள்.
(14)
மதுகைவா ளமர்க்கு
நென்னல் வந்தறை கூவிப் போன
முதுகடும் புலியே றன்ன முடங்குடற் குரவன் றானும்
அதிர்கழல் வீக்கிக் கச்சு மசைத்துவெண் ணீறுஞ் சாத்திக்
கதிர்கொள்வாள் பலகை தாங்கிக் கயவனுக் கெதிரே வந்தான்.
|
|