|
அதன் படமும் உவமங்களாம்.
பைய : சினையடியாகப் பிறந்த குறிப்புப்
பெயரெச்சம். வெள் ஆழி - வெள்ளிய அலையையுடைய கடல் என்றாவது,
பாற்கடல் என்றாவது கொள்க. வெண்ணிற உடம்பிற் கிடந்த பொற்
கவசத்திற்கு வெண்கடலில் முளைத்து விளங்கும் ஞாயிறு உவமமாயிற்று.
பருமம் - கலனை, கவசம். (14)
கோட்டுப்
பிறைகால் குளிர்வெண்கதிர் கற்றை போலச்
சூட்டுக் கவரித் தொடைத்தொங்கலு நெற்றி முன்னாப்
பூட்டுத் தரள முகவட்டும் பொலியப் பின்னல்
மாட்டுச் சதங்கைத் தொைகைல்லென வாய்விட் டார்ப்ப. |
(இ
- ள்.) கோட்டுப் பிறைகால் குளிர் வெண்கதிர்க் கற்றை போல -
கொம்பாகிய பிறை கக்கிய குளிர்ந்த வெள்ளிய கதிர்த்திரளைப் போல, கவரித் தொடை
சூட்டுத் தொங்கலும் - கவரியின் மயிராற்றொடுக்கப்பட்ட சூட்ட கிய
தொங்கலும், நெற்றி முன்னாப் பூட்டுத் தளர முகவட்டும் பொலிய - நெற்றிக்கு முன்னாகப்
பூட்டுதலையுடைய முத்தாலாகிய முகவட்டும் பொலிந்து
விளங்கவும். பின்னல் மாட்டுச் சதங்கைத் தொடை கல்லென வாய் விட்டு
ஆர்ப்ப - பின்னலாகிய மாட்டுச் சதங்கை மாலை கல்லென்று வாய்விட்டு
ஒலிக்கவும்.
சூட்டு
- உச்சியிலணிவது; ஈண்டுக் கொம்பினுச்சி. தொங்கல் - குஞ்சம்.
வட்டு - வட்டம். தொங்கலும் முகவட்டும் கதிர்க் கூற்றை போலப் பெலிய
என்க. கல்லென : ஒலிக்குறிப்பு. (15)
பணிநா வசைக்கும் படியென்னக் கழுத்தில் வீர
மணிநாட வசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை
பிணிநாண் சிறுகிங் கிணிபிப்பல மாலைத் தொங்கல்
அணிநா ணலம்பச் சிலம்பார்ப்ப வடிக ணான்கும். |
(இ
- ள்.) பணி நா அசைக்கும்படி என்ன - பாம்பு நாவினை
அசைக்குந் தன்மைபோல, கழுத்தில் வீரமணி நா அசைப்ப - கழுத்திலணிந்த
வீரகண்டை நாவினை அசைத்து ஒலிக்கவும், நகை முத்தின் வகுத்த தண்டை
- ஒளி பொருந்திய முத்தை உள்ளிடு பருக்கையாகக் கொண்டு செய்த
தண்டையும், நாண் பிணி சிறு கிங்கிணி - கயிற்றிற் கோத்த சிறு சதங்கை
மாலையும், நாண் மாலை அணி பிப்பலம் தொங்கல் - கயிற்றில் வரிசைப்படக்
கோத்த அழகிய அரசிலை வடிவமாகச் செய்த மாலையும், அலம்ப -
ஒலிக்கவும், அடிகள் நான்கும் சிலம்பு ஆர்ப்ப - நான்கு கால்களிலும்
சிலம்புகள் ஒலிக்கவும்.
பிப்பலம்
- அரசு. பிப்பல மாலையாகிய தொங்கல் என்றும், நாணாகிய
அணி என்றும் வேறு வேறாகக் கொள்ளலுமாம். (16)
அடியிட்டு நிலங்கிளைத் தண்டமெண் டிக்கும் போர்ப்பப்
பொடியிட் டுயிர்த்துப் பொருகோட்டினிற் குத்திக் கோத்திட்
டிடியிட் டதிர்கா ரெதிரேற்றெழுந் தாங்கு நோக்கிச்
செடியிட் டிருகண் ணழல்சிந்த நடந்த தன்றே. |
|