|
வடக்கது என்ன - தெற்கிலுள்ளது
வடக்கேயுள்ளதென்னவும், முடுக்குறும் -
இந் நான்கு திசைகளிலும் அதனை இடையறாது துரத்தும்; மருப்பில் கோத்து
முதுகுகீழ் ஆகத் தள்ளும் - கொம்பிற் கோத்து முதுகு கீழாமாறு தள்ளும்;
எடுக்குறும் - மீண்டு எடுக்கும்; மலையைக் கால் பேர்த்து என - மலையைக்
காற்றுப் பெயர்த்து வீசியது போல, திசைப்புறத்து வீசும் - திசைகளின்
புறத்தில் எறியும்.
குடக்கது,
குணக்கது, வடக்கது, தெற்கது என்பன வினைக்குறிப்புப்
பெயர். ஊழிக் காற்றானது மலையினைப் பெயர்த்தெறிந்தாற் போலவென்க.
பேர்த்தென, விகாரம். (19)
கொழுமணிச் சிகர கோடி சிதைபடக் குவட்டில் வீசும்
பழுமரச் செறிவில் வான்றோய் பணையிற வெறியும் வானின்
விழுமறப் பசுப்போல் வீழ வேலைவாய் வீசு மிங்ஙன்
செழுமதிக் கோட்டு நந்தித் தேவிளை யாடல் செய்து. |
(இ
- ள்.) கொழுமணிச் சிகரகோடி சிதைபடக் குவட்டில் வீசும் -
பருத்த உருப்பெற்ற மணிகள் நிறைந்த சிகரவரிசைகள் தூளாகும்படி
மலையின்கண் எடுத்து எறியும்; பழுமரச் செறிவில் - ஆலமரங்களின்
நெருக்கின்கண், வான் தோய் பணை இற எறியும் - வானையளாவிய
அவற்றின் கிளைகள் முறியுமாறு வீசும்; வானின் விழும் அறப் பசுப் போல்
வீழ வேலைவாய் வீசும் - வானுலகினின்றும் கடலில் விழும் காம தேனுவைப்
போல விழுமாறு கடலின்கண் எடுத்து வீசும்; இங்ஙன் - இங்ஙனம், செழுமதிக்
கோட்டு நந்தித்தே விளையாடல் செய்து - செழுவிய (அரை) மதி போன்ற
கொம்பினையுடைய திருநந்தியாயிய தேவு போர் விளையாடல் செய்து.
துருவாச
முனிவன் சாபத்தால் இந்திரன் செல்வமுற்றும் கடலில் ஒளித்த
ஞான்று காமதேனுவும் அதன்கண் விழுந்ததாகலின் 'வானின் விழும் அறப்
பசுப்போல்' என்றார். வானின், ஐந்தனுருபு நீக்கப் பொருட்டு. அவ்வறப் பசுப்
போல் இம் மறப்பசு வீழவென்க. தே - தெய்வம். (20)
பூரிய ரெண்ணி யாங்கே பொருதுயி ரூற்றஞ் செய்யா
தாரிய விடைதன் மாண்ட வழகினைக் காட்டக் காமுற்
றீரிய நறும்பூ வாளி யேறுபட் டாவி யோடும்
வீரியம் விடுத்து வீழ்ந்து வெற்புரு வாயிற் றன்றே. |
(இ
- ள்.) பூரியர் எண்ணி யாங்கே - கீழ்மக்களாகிய சமணர்கள்
எண்ணிய வண்ணமே, பொருது உயிர் ஊற்றம் செய்யாது - பொருதலினால்
உயிர்க்குத் துன்பஞ் செய்யாது, ஆரிய விடை தன் மாண்ட அழகினைக் காட்ட
- அழகிய இடபமானது தனது மாட்சிமைப்பட்ட அழகைக் காட்ட, காமுற்று -
(அப் பசுவானது) அதனை விரும்பி, ஈரிய நறும் பூவாளி ஏறுபட்டு - குளிர்ந்த
நறிய மலரம்புகளால் ஏறுண்டு ஆவியோடும் வீரியம் விடுத்து - உயிரோடு
வீரியத்தையும் விட்டு வீழ்ந்து வெற்பு உரு ஆயிற்று - கீழே விழுந்து மலை
வடிவமாயிற்று.
|