|
எவ்வாறு முடியுமோ அந்நெறியை,
கடிது புரிந்தருள் எனப் பணிந்தனன் -
விரைந்து செய்தருள வேண்டும் என்று இரந்து வணங்கினான்; பரனும் -
சோம சுந்தரக் கடவுளும், நெடிய வான்படும் அமுது என எதிர்மொழி
நிகழ்த்தும் - பரந்த வானின்கண் உண்டாகும் அமிழ் தென்னுமாறு
எதிர்மாற்றம் கூறியருளுவான்.
முடியுமா,
ஈறு தொக்கது. அரிதோ என ஓகாரம் விரிக்க. புரிதல் -
செய்தல்; ஈண்டு உணர்த்துதல்; விரும்பியருள் எனலுமாம். வான் மொழியாகக்
கூறுதலின் 'வான்படும் அமுதென' என்றார். இஃது இல்பொருளுவமை.
(33)
|
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
இரவிதன்
மரபின் வந்த விராமகே ளெமக்குத் தென்கீழ்
விரவிய திசையிற் போகி விரிகடற் சேதுகட்டிக்
கரவிய வுள்ளக் கள்வன் கதிர்முடி பத்துஞ் சிந்தி
அரவமே கலையி னாளை யருஞ்சிறை யழுவ நீக்கி. |
(இ
- ள்.) இரவி தன் மரபில் வந்த இராமகேள் - சூரியன் மரபில்
வந்த இராமனே கேட்பாயாக; எமக்குத் தென்கீழ் விரவிய திசையில் போகி
- எமக்குத் தென்கிழக்காகப் பொருந்திய திசையிற் சென்று, விரிகடல்
சேதுகட்டி - விரிந்த கடலிலே சேதுபந்தனஞ் செய்து, கரவிய உள்ளக்கள்வன்
கதிர்முடி பத்தும் சிந்தி - வஞ்சனையையுடைய உள்ளத்தையுடைய
இராவணனது விளக்கமுள்ள பத்துத் தலைகளையுந் துணித்து, அரவம்
மேகலையினாளை - ஒலிக்கின்ற மேகலையணிந்த சானகியை, அருஞ்சிறை
அழுவம் நீக்கி - பொறுத்தற்கரிய சிறைக்கூடத்தினின்றும் நீக்கி.
தெற்கும்
கிழக்கும் கலந்த திசை என்றுமாம். சேது - அணை. கரவிய
- கரந்த. சிந்தி, தன் வினைக்கும் பிற வினைக்கும் பொதுவாய சொல்.
அழுவம -பரப்பு, கூடம். (34)
மீண்டுநின் னயோத்தி யெய்தி விரிகட லுலகம் பன்னாள்
ஆண்டினி திருந்து மேனாள் வைகுண்ட மடைவா யாக
ஈண்டுநீ கவலை கொள்ளே லெனு*மச ரீரி கேட்டு
நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து நிருத்தனை விடைகொண் டேகி. |
(இ
- ள்.) மீண்டும் நின் அயோத்தி எய்தி - மீளவும் நினது
அயோத்தியை அடைந்து, விரி கடல் உலகம் பல் நாள் ஆண்டு இனிது
இருந்து - பரந்த கடல் சூழ்ந்த உலகத்தை நெடுங்காலம் ஆட்சி புரிந்து
இனிதாக இருந்து, மேல் நாள் வைகுண்டம் அடைவாயாக - பின்னாளில்
வைகுண்டத்தைச் சேர்வாயாக; ஈண்டு நீ கவலை கொள்ளேல் - இப்பொழுது
நீ கவலை கொள்ளாதே, எனும் அசரீரி கேட்டு - என்னும் அசரீரீயுரையைக்
கேட்டு, நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து - நெடியவனாகிய இராமன் மகிழ்ந்து
(பா
- ம்.) * கொள்ளேலென.
|