எங்குமிப் படியே யோலை செலவிடுத் திருப்பவாறு
திங்களி னளவு மந்தச் சேவகர் வரவு காணா
தங்கதிர் வேலோன் சேனைக் கரசனை யழைத்து நாளை
வெங்கதிர் படுமுன் சேனை யாவையும் விளித்தி யென்றான். |
(இ
- ள்.) எங்கும் இப்படியே ஓலை செல விடுத்து இருப்ப -
எவ்விடத்தும் இங்ஙனமே பொய்யோலை போக விடுத்து இருக்க, ஆறு
திங்களின் அளவும் அந்தச் சேவகர் வரவு காணாது - ஆறு மாதங்கள்
வரையும் அந்த வீரர்கள் வரவினைக் காணாமல், அம் கதிர் வேலோன் -
அழகிய ஒளியினையுடைய வேற்படையேந்திய குலபூடண பாண்டியன்,
சேனைக்கு அரசனை அழைத்து - தானைக் காவலனாகிய சுந்தர சாமந்தனை
அழைத்து, நாளை வெங்கதிர் படுமுன் - நாளைச் சூரியன் மறையு முன்னே,
சேனை யாவையும் விளித்தி என்றான் - படை வீரர்களனைவரையும்
அழைப்பாயாக என்று கூறினான்.
படுதல்
- மறைதல். விளித்தி : ஏவலொருமை முற்று; த் : எழுத்துப்
பேறு. (15)
என்றமன் னவனுக் கேற்கச் சாமந்த னிசைந்து வெள்ளி
மன்றவ னடிக்கீழ் வீழ்ந்து வள்ளலே யரச னீந்த
குன்றுறழ் நிதிய மெல்லாங் கொண்டெனைப் பணிகொண்டாயே
வன்றிறற் சேனை யீட்டும் வண்ணம்யா தென்ன நின்றான். |
(இ
- ள்.) என்ற மன்னவனுக்கு ஏற்கச் சாமந்தன் இசைந்து - என்று
கூறிய வேந்தனுக்குப் பொருந்தச் சாமந்தன் உடன்பட்டு, வெள்ளி மன்றவன்
அடிக்கீழ் வீழ்ந்து - வெள்ளியம்பலவாணன் திருவடியின் கீழே விழுந்து
வணங்கி, வள்ளலே - என் வள்ளால், அரசன் ஈந்த குன்று உறழ் நிதியம்
எல்லாம் கொண்டு - மன்னன் அளித்த மலைபோலும் பொருள் முழுதையும்
ஏற்றுக் கொண்டு, எனைப் பணி கொண்டாயே - என்னை அடிமை
கொண்டனையே, வன் திறல் சேனை ஈட்டும் வண்ணம் யாது என்ன நின்றான்
- மிக்க வலியுடைய சேனைகளைத் திரட்டும் வகை யாது என்று குறையிரந்து
நின்றான்.
வள்ளல்
- வரையா தளிப்போன். தான் விரும்பியதனை அளிக்க
வேண்டுமென்னுங் கருத்தால் 'வள்ளலே' என்றான். மலைபோலும்
நிதியமெல்லாம் கொள்ளை கொண்ட வள்ளலே என நகை தோன்றுமாறுங்
கொள்க. வன்றிறல் : ஒரு பொருளிருசொல். (16)
அடியவர் குறைவு தீர்த்தாண் டருள்வதே விரதம் பூண்ட
கொடியணி மாடக் கூடற் கோமகன் காமற் காய்ந்த
பொடியணி புராணப் புத்தேட் புண்ணிய னருளி னாலே
இடியதிர் விசும்பு கீறி யெழுந்ததோர் தெய்வ வாக்கு. |
(இ
- ள்.) அடியவர் குறைவு தீர்த்து ஆண்டருள்வதே விரதம் பூண்ட
- அடியாரின் குறையினைப் போக்கி ஆண்டருள்வதையே விரதமாகக்
|