II


மெய்க்காட்டிட்ட படலம்199



கண், செம்பொன் அரி அணை மீது வைகி - செம்பொன்னாலாகிய
சிங்காதனத்தின் மீது அமர்ந்து.

     திருமகன் - சிறந்தோன், அரசன். அம் : சாரியை. தென்னன், மீனவன்
என்பவற்றைச் சுட்டாகக் கொள்க. (28)

தெவ்வடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ* நோக்கி
எவ்வெவ தேயத்+துள்ளா ரிவரென வெதிரே நின்று
கௌவையின் மனச்சா மந்தன் கையிற்பொற் பிரம்பு நீட்டி
அவ்வவர் தொகுதி யெல்லா மணியணி நிறுவிக் கூறும்.

     (இ - ள்.) தெவ் அடு மகிழ்ச்சி பொங்க - பகைவனாகிய சேதி
ராயனைக் கொல்லும் மகிழ்ச்சி மிக, சேனையின் செல்வம் நோக்கி -
சேனையின் பெருக்கத்தைப் பார்த்து, இவர் எவ்வெவதேயத்து உள்ளார் என - இவர்கள் எந்தெந்தத் தேயத்திலுள்ளவர்கள் என்று பாண்டியன் வினவ,
கௌவை இல் மனச்சாமந்தன் - துன்பமில்லாத மனத்தினையுடைய சாமந்தன்,
எதிரே நின்று கையில் பொன் பிரம்பு நீட்டி - எதிரில் நின்று கையிலுள்ள
பொற் பிரம்பினை நீட்டி, அவ்வவர் தொகுதி எல்லாம் அணி அணி நிறுவிக்
கூறும் - அவரவர் கூட்டங்களையெல்லாம் அணியணியாக நிறுத்திக் கூறுவான்.

     நோக்கி மகிழ்ச்சி பொங்க வினவ என்க; பொங்கு அச்சேனை எனப்
பிரித்துரைத்தலுமாம். எவ்வெவ, அ : அசை : அவரவர் என்பது அவ்வவர்
என்றாயது.(29)

(29) [கலிவிருத்தம்]
கொங்கரிவ ரையகுரு நாடரிவ ரைய
கங்கரிவ ரையகரு நாடரிவ ரைய
அங்கரிவ ரையவிவ ராரியர்க ளைய
வங்கரிவ ரையவிவர் மாளவர்க ளைய.

     (இ - ள்.) ஐய இவர் கொங்கா - ஐயனே இவர் கொங்க நாட்டினர்,
ஐய இவர் குருநாடர் - ஐயனே இவர் குருநாட்டினர்; ஐய இவர் கங்கர் -
ஐயனே இவர் கங்க நாட்டினர்; ஐய இவர் கருநாடர் - ஐயனே இவர் கருநாட
நாட்டினர்; ஐய இவர் அங்கர் - ஐயனே இவர் அங்க நாட்டினர்; ஐய இவர்
ஆரியர்கள் - ஐயனே இவர்கள் ஆரிய நாட்டினர்கள்; ஐய இவர் வங்கர் -
ஐயனே இவர் வங்க நாட்டினர்; ஐய இவர் மாளவர்கள் - ஐயனே இவர்கள்
மாளவநாட்டினர்கள். (30)

குலிங்கரிவ ரையவிவர் கொங்கணர்க ளைய
தெலுங்கரிவ ரையவிவர் சிங்களர்க ளைய
கலிங்கரிவ ரையகவு டத்தரிவ ரைய
உலங்கெழு புயத்திவர்க ளொட்டியர்க ளைய.

    (பா - ம்.) * சேனையின் செவ்வி. +எவ்வெத் தேயத்திலுள்ளார்.