|
(இ
- ள்.) இத்தகைய சேண் புலன் உளாரை - இத்தன்மையுடைய
சேய்மை நாடுகளில் உள்ளாரை, இவண் உய்த்த வித்தகைமை என் என -
இங்கு வருவித்த சாமார்த்தியம் யாது என்று, வினவி யருள் செய்யேல் -
வினாவியருளாதே, அத்த - அப்பெருமானே, நின் அரும் பொருள்
அனைத்தும் - நினது அரிய பொருள் முற்றும், வரையாது உய்த்தலின் -
வரையறையின்றிச் செலவு செய்தமையால், அடைந்தனர்கள் என உரைத்தான் -
இவர்கள் யாவரும் வந்தார்கள் என்று கூறினான்.
வித்தகம்
- சதுரப்பாடு; இது மை என்னும் பகுதிப்பொருள் விகுதிபெற்று
வித்தகைமை எனத் திரிந்தது. இவர்கள் வந்தமைக்கு நின் பொருள்
காரணமாமன்றி என் வித்தகம் காரணமன்று என அடங்கிக் கூறினான். அரும்
பொருள் - பெறுதற்கரிய பொருள், அறநெறியால் வந்தபொருள். ஆல் :
அசை. அறிவித்தவன் வினாவற்க உய்த்தலின் அடைந்தனர் என உரைத்தான்
என்க. இவ்வைந்து செய்யுட்களிலும் பலர்பாலில் இரு விகுதிபெற்று வந்த
சொற்களுள்ளமை காண்க. (34)
|
[அறுசீரயாசிரிய விருத்தம்]
|
அந்நெடுஞ்
சேனை தன்னுட் சேணிடை யடன்மா வூர்ந்து
பின்னுற நிற்கு மொற்றைச் சேவகப் பிரானை நோக்கி
மன்னவ னவன்யா ரென்னச் சாமந்தன் வணங்கி யைய
இன்னவர் சேனை வெள்ளத் தியாரையென் றறிவ தென்றான். |
(இ
- ள்.) அந் நெடுஞ்சேனை தன்னுள் - அப் பெரிய சேனையின்
கண், சேண் இடை அடல்மா ஊர்ந்து பின்உற நிற்கும் - சேய்மையில் வலிய
குதிரையைச் செலுத்திப் பின்னாக நிற்கின்ற, ஒற்றைச் சேவகப் பிரானை -
ஒப்பில்லாத வீரனாகிய இறைவனை, மன்னவன் நோக்கி - பாண்டி வேந்தன்
பார்த்து, அவன் யார் என்ன - அவன் யார் என்று வினவ, சாமந்தன்
வணங்கி - சாமந்தன் தொழுது, ஐய - ஐயனே, இன்னவர் சேனை வெள்ளத்து
- இவர்களின் சேனைப் பெருக்கத்துள், யார் என்று அறிவது என்றான் - யார்
என்று அறிந்து சொல்லக்கூடும் என்று கூறினான்.
இச்
சேனை வெள்ளத்திலே தனித்தனியாக அறியலுறின் யாரை
அறியக்கூடும் என்றா னென்க. இன்னவர் யாரென்று அறிவது என
இயைத்தலுமாம். (35)
அவரையிங் கழைத்தி யென்றா னரசன்றன் வழிச்செல் வார்போற்
கவயமிட் டவரும் போந்தார் காவலன் களிகூர்ந் தம்பொன்
நவமணிக் கலன்பொன் னாடை நல்கினா னுள்ளத் தன்பு
தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்துத்தன் றமர்க்கு மீந்தார். |
(இ
- ள்.) அவரை இங்கு அழைத்தி என்றான் - அவரை இங்கு
அழைப்பாயாக என்றான் வேந்தன்; அரசன் தன் வழிச் செல்வார்போல் -
அவனது வழிப்பட்டுச் செல்பவரைப்போல, கவயம் இட்டவரும் போந்தார் -
கவசமணிந்த அவ் வீரரும் போந்தார்; காவலன் களி கூர்ந்து - மன்னன்
மகிழ்ச்சிமிக்கு, அம்பொன் நவமணிக்கலன் பொன் ஆடை நல்கினான்.
அழகிய பொன்னாலாகிய நவமணியிழைத்த அணிகளையும்
|