|
பொன்னாடைகளையும்
கொடுத்தான்; உள்ளத்து அன்பு தவறிலான் பொருட்டு
வாங்கித் தரித்து - அவர் மனத்தின்கண் அன்பு நீங்காத சாமந்தன் பொருட்டு
அவற்றை வாஙகி அணிந்துகொண்டு, தன் தமர்க்கும் ஈந்தார் - தம்
பரிசனங்கட்குங் கொடுத்தருளினார்.
அழைத்தியென்றான்
அழைக்கவே அவரும் போந்தார் என
விரித்துரைக்க. அவரது தோற்றத்தால் அரசன் களிகூர்ந்தானாயிற்று.
தன்றமர்க்கும் ஈந்தார் என ஒருமைச் சொல்லும் பன்மைச் சொல்லும்
விரவி வந்தன. (36)
ஆய்ந்தவெம் பரிமாத் தூண்டி யைங்கதி நடத்திக் காட்டி
ஏய்ந்ததஞ் சேனை வெள்ளத் தெய்தினா ரெய்து மெல்லை
வேய்ந்ததார்ச் சேதி ராயன் வேட்டைபோய்ப் புலிகோட் பட்டு
மாய்ந்தன னென்றோ ரொற்றன் வேந்தன்முன் வந்து சொன்னான். |
(இ
- ள்.) ஆய்ந்த வெம் பரிமாத்தூண்டி - ஆராய்ந்துகொண்ட கடிய
செலவினையுடை குதிரையைச் செலுத்தி, ஐங்கதி நடத்திக் காட்டி - ஐவகைக்
கதிகளிலும் நடத்திக் காண்பித்து, ஏய்ந்த தம் சேனை வெள்ளத்து எய்தினார்
- பொருந்திய தமது தானைவெள்ளத்தை அடைந்தார்; எய்தும் எல்லை
-அங்ஙனம் அடையும்பொழுது, தார் வேந்த சேதிராயன் வேட்டைபோய் -
மாலையணிந்த சேதிராயன் என்பான் வேட்டைக்குச் சென்று, புலிகோட்பட்டு
மாய்ந்தனன் என்று - புலியினாற் கொள்ளப்பட்டு இறந்துபட்டனன் என்று,
வேந்தன்முன் ஓர் ஒற்றன் வந்து சொன்னான் - மன்னன் முன்னே - ஓர்
ஒற்றன் வந்து கூறினன்.
ஐங்கதி
இவை யென்பதனை,
"விக்கிதம்
வற்கிதம் வெல்லு முபகண்டம்
மத்திமம் சாரியோ டைந்து" |
என்பதனா லறிக; கோட்பட்டு
: தம்மினாய தொழிற்சொல். (37)
முரசதி ரனிக நோக்கி முகமலர்ந் துவகை பூத்த
அரசனு மனிக வேந்தற் களவில்சீர்த் தலைமை யோடும்
வரிசைகண் மிதப்ப நல்கி வந்துமெய்க் காட்டுத் தந்து
பரசிய பதாரி தத்தம் பதிபுகச் செலுத்து கென்றான். |
(இ
- ள்.) முரசு அதிர் அனிகம் நோக்கி - முரசு முழங்குஞ்
சேனையைப் பார்த்து, முகம் மலர்ந்து உவகை பூத்த அரசனும் - மக
மலர்ந்து மகிழ்ச்சியுற்ற வேந்தனும், அனிக வேந்தற்கு - சேனைத்
தலைவனாகிய சுந்தரசாமந்தனுக்கு, அளவு இல் சீர்த்தலைமையோடும்
வரிசைகள் மிதப்ப நல்கி - அளவில்லாத சிறப்பினையுடைய தலைமை
யோடு வரிசைகளையும் நிரம்பக் கொடுத்து, வந்து மெய்க்காட்டுத் தந்து
பரசியபதாதி தத்தம் பதிபுகச் செலுததுக என்றான் - வந்து மெய்க்காட்டுக்
கொடுத்துத் துதிக்கப்பெற்ற சேனைகள் தத்தம் நகரிற் செல்லுமாறு விடுக்க
என்று கூறினன்.
|