|
புறமும் குயின்று -
உள்ளும் புறமும் இழைத்து, ஞானக்கொழுந்து அனைய
தாய் இல் - ஞானக்கொழுந்துபோலும் அங்கயற்கண்ணம்மையின்
திருக்கோயிலும், அறுகால் பீடிகை - அறு காற் பீடமும், வான் தடவு கொடிய
நெடிய பெருவாயில் - விண்ணினைத் தடவுகின்ற கொடியையுடைய நீண்ட
பெரிய கோபுர வாயிலும், பிறவும் - மற்றுள்ளனவும், அழகு எறிப்ப - அழகு
வீச, மறையின் வரம்பு அறிந்தான் - வேதத்தின் எல்லையை அறிந்தவனாகிய
குலபூடணபாண்டியன், வாய்ந்தான் - தகடு வேய்ந்தான்.
ஆய
- ஆகிய; அத்தன்மையுடைய. அசும்பு - ஒளியின் கசிவு. கொடிய :
பொருட் பெயரடியாக வந்த குறிப்புப் பெயரெச்சம். வாயில் :
இலக்கணப்போலி. (17)
முந்திக்
குறையா நிதிக்கடலை முகந்து முகந்து நாடோறுஞ்
சிந்திக் குலபூ டணக்கொண்ட றெய்வ தருமப் பயிர்வளர்ப்பப்
பந்தித் திரைமுந் நீர்மேகம் பருகிச் சொரியப் பல்வளனும்
நந்திக் கன்னி நாடளகை நகர்போற் செல்வந் தழைத்தன்றே. |
(இ
- ள்.) குலபூடணக் கொண்டல் - குலபூடணை வழுதி என்னும்
முகிலானது, முந்தி - முற்பட்டு, குறையா நிதிக்கடலை முகந்து முகந்து -
குறையாத நிதியாகிய கடலினை மொண்டு மொண்டு, நாள்தோறும் சிந்தி
தெய்வ தருமப்பயிர் வளர்ப்ப - நாள்தோறும் பொழிந்து தெய்வத் தன்மை
பொருந்திய தருமமாகிய பயிரை வளர்க்க, மேகம் - முகில்கள், பந்தித்திரை
முந்நீர் பருகிச் சொரிய - வரிசையாய் வரும் அலைகளையுடைய கடல்நீரைக்
குடித்து மழையினைப் பொழிய, பல்வளனும் நந்தி - பல வளங்களும் மிகுந்து.
கன்னிநாடு - பாண்டி நாடானது, அளகை நகர்போல் செல்வம் தழைத்தன்று - அளகாபுரியைப்போலச்
செல்வந் தழைத்தது.
குலபூடணன்
அளவின்றி அறத்தினை வளர்க்கவே பின்பு மேகமும்
மழை பொழிந்தது; நாடும் தழைத்தது என்க. அடுக்கு மிகுதிப் பொருட்டு.
தெய்வதருமம் - சிவபுண்ணியம் என்றுமாம். அளகைநகர் நிதியின்
கிழவனாகிய குபேரனடையது ஆகலின் குறையாத செல்வ முடையடதாம்.
தழைத்தன்று - தழைத்தது; அன் : சாரியை. நாடு செல்வம் தழைத்தது என
இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்தின் மேல் நின்றது. முன்னிரண்டடியும் உருவகம்.
(18)
|
[எழுசீரடியாசிரியவிருத்தம்]
|
பவையா
கரணர்க ணையா யிகர்மறை
வல்லோர் மறைமுடி சொல்லாய்வோர்
மெய்யா மிருதிகள் பொய்யா விரதிகள்
வேள்வித் தழல்களை வாழ்விப்போர்
பையா டரவணி யையா னனனுரை
பகர்வோ ருலகிய லகல்வோர்கள்
எய்யா துறைதலி னையா தளகைய
தென்னப் பொலிவது தென்னாடு. |
|