|
மலர்
போன்ற கைகளைச் சென்னியிற் கூப்பி வணங்கினவர்கள்
அங்ஙனம கூப்பியவாறே அடியில் வீழ்வதனை அஞ்சலப்போது பெய்வார்
வீழ்வார் என்றனர். குவித்த கையிலுள்ள மலரைச் சொரிந் தென்றுமாம்.
பெய்வார், வீழ்வார் என்பன முற்றெச்சங்கள். தஞ்சம் - பற்றுக்கோடு; ஈறு
தொக்கது. தழுவிய : செய்யின் வென்னும் வினையெச்சம். எஞ்சுவான் -
கடப்பான் என்னும் பொருள் குறித்தது. இரக்குவாரேன் எஞ்சிக்கூறேன்
எனப் பதிற்றுப்பத்திலும் இப் பொருளில் வந்துள்ளமை காண்க. நேர் நின்று
துதித்து எட்டுந் தோறும் அகப்படா தொழிதலின் வஞ்சனா யகல்வான்
என்றார். ஓகாரம் எதிர்மறை. இது வேற்றுப் பொருள் வைப்பின்பாற்படும் (12)
அடுத்தெமைத்
தழாதி ரேனீ ரவிழ்த்தபூங் கலையை மீள
உடுத்துமி னும்பால் யாங்கண் மையனோ யுழப்ப நோக்கிக்
கடுத்தெமர் முனியா முன்னங் கழற்றிய வளையுங் கையில்
எடுத்திடு மென்றார் நாளை யிடுதுமென் றேகினானே. |
(இ
- ள்.) நீர் எமை அடுத்துத் தழாதிரேல் நீர் எம்மை நெருங்கித்
தழுவாது போவீராயின், அவிழ்த்த பூங்கலையை மீள உடுத்துமின் - அவிழ்த்த
அழகிய கலையை யேனும் மீள உடுத்தும்; நம்பால் யாங்கள் மையல் நோய்
உழப்ப - நும்மிடத்து யாங்கள் கொண்ட காம மயக்கத்தாலே துன்பமுற, எமர்
நோக்கிக் கடுத்து முனியா முன்னம் - எம் கணவர் அதனை நோக்கி
எங்களைச் சினந்து வெறுக்கா முன், கழற்றிய வளையும் கையில் எடுத்து இடும் என்றார்
- கழற்றிய வளையும் எடுத்துக் கையில் இடும் என்று வேண்டினர்;
நாளை இடுதும் என்று ஏகினான் - நாளை வந்து இடவோம் என்று சென்றனன்.
தழுவாதிர்
என்பது தழாதிர் என்றாயிற்று. கடுத்து என்பதற்கு விரைந்து
என்றும், மிக்கு என்றும் பொருள் கூறலுமாம். கலை அவிழ்தலும் வளை
கழலுதலும் அவர் காரணமாக நிகழ்ந்தமையின், நீர் அவிழ்த்த கலை என்றும்
கழற்றிய வளை என்றும் கூறினர். அத்துணைப் பரிச வின்பேனும் நுகருங்
கருத்தால் இங்ஙனம் வேண்டினர். மறுபிறப்பில் அவர்கட்கு வளையிடுதல்
குறித்து நாளை யிடுதுமென்றேகினான் என்க. தாருக வானத்து முனிவர்கள்
சில வழிபாட்டைக் கைவிட்டு வேள்வியே பொருளெனக் கொண் டிறு
மாந்திறுக்க, அவர் மனைவயரும் கற்பிலே தமக்கு நிகராவார்
யாருமிலரெனச் செருக்குற்றிருந்தனர்; அன்னாரின் தருக்கை யொழிக்கும்
பொருட்டுச் சிவபெருமான் பிச்சைப் பெருமானாகப் போந்து முனிபன்னியர்
கற்வினின்றும் நெகிழுமாறு செய்தனர் என்பது புராண வரலாறு. (13)
பிள்ளைவெண் டிங்கள் வேய்ந்த பிரான்கொண்டு போன நாணும்
உள்ளமு மீட்க லாற்றா துயங்கினார் கலையுஞ் சங்குந்
துள்ளவைங் கணையான் வாளி துளைப்பவெம் பசலை யாகங்
கொள்ளைகொண் டுண்ண நின்றா ரந்நிலை கொழுநர் கண்டார். |
(இ
- ள்.) பிள்ளை வெண் திங்கள் வேய்ந்த பிரான் கொண்டு போன -
வெள்ளிய இளமதியை அணிந்த இறைவன் கொண்டுபோன, நாணும் உள்மும்
மீட்கலாற்றாது உயங்கினார் - நாணினையும் மனத்தையும்
|