|
தொடி - ஈண்டுக் கங்கணம்.
கண்டிகை - கழுத்தணி. அரும்பிய -
கோங்கரும்புபோல் முகிழ்த்த. ஓகாரம் : எதிர்மறை. இச்செய்யுளை மகளிர்
கூற்றாக்கி, ஆதலால் என விரித்து, வருஞ் செய்யுளோடு கூட்டி முடிக்க;
கவிக் கூற்றுமாம். (24)
செல்வநல்
வணிகிரெஞ் செங்கைக் கேற்பன
நல்வளை தெரிந்திடு மென்று நாய்கர்முன்
வல்வள ரிளமுலை மகளிர் மின்னுமிழ்
கல்வளர் கடகமென் காந்த ணீட்டினார். |
(இ
- ள்.) செல்வ நல்வணிகிர் - செல்வ மிக்க நல்ல வணிகரே, எம்
செங்கைக்கு ஏற்பன - எம்முடைய சிவந்த கைகளுக்குப் பொருந்திய, நல்
வளை தெரிந்து இடும் என்று - நல்ல வளைகளை ஆராய்ந்து இடு வீராக
என்று, வல் வளர் இளமுலை மகளிர் - சூதாடு கருவிபோலக் குவிந்து
வளர்ந்த இளமையாகிய கொங்கையையுடைய மகளிர், நாயகர் முன் -
வணிகர் முன்னே, மின் உமிழ் கல்வளர் கடகம் மென் காந்தள் நீட்டினார்
- ஒளிவீசும் கற்கள் அழுத்திய கடகத்தையுடைய காந்தள் மலர் போன்ற
கையை நீட்டினார்கள்.
ஏற்பனவும்
நல்லனவுமாகிய வளை என்றுமாம். கணந்தோறும் வேட்கை
மிகலால் உடல் மெலிந்து வளை கழலுதலின் ஏற்பன நல்வளை தெரிந்து
இடும் எனக் காமக் குறிப்புத் தோன்றக் கூறினாரென்க. கல் - மாணிக்கம்
முதலியன. கல்வளர் - கற்பள்பொருந்திய. (25)
பண்டருங் கிளவியங் கயற்கட் பாவைகைத்
தண்டளிர் பற்றிய தடக்கை மாதர்கைம்
முண்டகம் பற்றியே முகிழ்த்துப் பல்வரி
வண்டுக ளேற்றுவார் மைய லேற்றுவார். |
(இ
- ள்.) பண்தரும் கிளவி அங்கயற்கண் பாவை - இசைபோலு
மினிமையைத்தரும் சொற்களையுடைய அங்கயற்கண் ணம்மையினது,
கைத்தண் தளிர் பற்றிய தடக்கை - திருக்கரமாகிய குளிர்ந்த தளிரைப்
பிடித்த நெடிய கையால், மாதர் கைம்மூண்டகம் பற்றியே முகிழ்த்து -
வணிக மகளிரின் கைகளாகிய தாமரை மலரைப் பிடித்து முகிழ்ப்பித்து,
பல்வரி வண்டுகள் ஏற்றவார் மையல் ஏற்றுவார் - பல வரிகளையுடைய
வளையல்களைச் செறிப்பாராய்க் காம மயக்கத்தை மிகுவிப்பாராயினர்.
மாதர்
- வணிக மாதர். வண்டு - வளை. முண்டகம் என்பதற்கேற்ப
வண்டு என நயமுறக் கூறினார். வளையலைக் கையில் ஏற்றுவதுடன்
மயக்கத்தை மனத்தில் ஏற்றினார் என்க. (26)
புங்கவ னிடுவளை புடைத்து மீளவந்
தெங்களுக் கிடவிலை யிடுதி ராலெனக்
கொங்கவிழ் பைங்குழ லெருத்தங் கோட்டிநின்
றங்கர நீட்டுவா ராசை நீட்டுவார். |
|