நாளையும் வளையிட நண்ணுமிங் கென்பார்
கோள்வளை விலையிது கொண்டுபோ மென்பார்
வாள்விழி யீர்பினாள் வாங்கிக் கோடுமென்
றாளரி யேறனா ராடிப் போயினார். |
(இ
- ள்.) நாளையும் வளை இட இடங்கு நண்ணும் என்பார் -
நாளையும் வளை இடுதற்கு இங்கு வருவீராக என்பார்கள் (மற்றும்),
கோள்வளை விலை இது கொண்டு போம் என்பார் - நாங்கள் கொண்ட
வளைக்கு விலையாகும் இதனைக் கொண்டுபோம் என்பார்கள்; ஆள் அரி
ஏறு அனார் - ஆண்மையுடைய சிங்கவேறு போன்ற வணிகேசர் (அம்
மகளிரை நோக்கி), வாள் விழியீர் - வாள்போலும் கண்களை யுடையவர்களே,
பின் நாள் வாங்கிக் கோடும் என்று - நாளை வாங்கிக் கொள்வேம் என்று
கூறி, ஆடிப் போயினார் - திருவிளையாடல் செய்து சென்றருளினர்.
கோள்
: முதனிலை திரிந்தது. கோடும் - கொள்ளுதும். ஆள் -
ஆண்மை. ஆடி என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, உரைத்து
என்று கூறுதலுமாம். (32)
போயின வணிகர்தம் புடையின் மின்னெனப்
பாயின மகளிரும் பலருங் காணமுன்
மேயின விண்ணிழி விமானத் துள்ளொளி
ஆயின திருவுரு வாகித் தோன்றினார். |
(இ
- ள்.) போயின வணிகர் - அங்ஙனஞ் சென்ற வணிகராகிய
பெருமானார், தம்புடையில் மின் எனப் பாயின மகளிரும் பலரும் காண -
தமது பக்கத்தில் - மின்னலைப் போலப் பரந்து நின்ற மகளிரும் ஏனை
யோருங் கண்டு வியக்க, முன் மேயின - முன் எழுந்தருளி யிருந்த, விண்
இழி விமானத்துள் ஒளி ஆயின திரு உரு ஆகித் தோன்றினார் -
விசும்பினின்று மிழிந்த விமானத்தின்கண் ஒளி மயமாகிய திருவுருவமாகித்
தோன்றி யருளினார்.
பாயின
- பரந்த. மேயின - மேவின : பெயரெச்சம் இடப்பெயர்
கொண்டது, சென்றவர் மறைந்து சிவலிங்கத் திருவுருவிற் கலந்தருளினார்
என்க. (33)
[எழுசீரடியாசிரிய
விருத்தம்]
|
மட்ட
லம்பு கோதை யார்முன் வளைப கர்ந்த வணிகர்தாம்
பட்டி சைந்த வல்கு னங்கை பாக ராகு மெனவியந்
துட்ட தும்பு முவகை வெள்ள முற்றெ ழுந்த குமிழிபோற்
கட்ட தும்பு புனலி லாழ்ந்து களிய டைந்த நகரெலாம். |
|