II


அட்டமாசித்தி யுபதேசித்த படலம்239



கதிர்கலம்பெய் காட்சிபோல்
உதிர்பழத்தி னுடலெலாம்
புதைபடக் கிடந்தனர்
மதரரித் தடங்கணார்.

     (இ - ள்.) மதர் அரி தடங்கணார் - மதர்த்த அரி பரந்த பெரிய
கண்களையுடைய அம்மகளிர், கதிர் கலம்பெய் காட்சிபோல் உதிர் பழத்தின்
- (வேட்கோவர் வனைந்த) ஒளிவிடுகின்ற புதுக்கலம் வீழுந் தோற்றம்போல
உதிர்கின்ற ஆலம் பழத்தினால், உடல் எலாம் புதை படக் கிடந்தனர் -
உடல் முழுதும் புதையக் கிடந்தனர்.

     கதிர் கலம் : வினைத்தொகை; இயல்பாகலின்.

"புதுக்கலத் தன்ன கனிய வாலாம்"

என ஐங்குறு நூற்றிலும்,

"புதுக்கலம் போலும் பூங்கனி யாலும்"

எனச் சீவகசிந்தாமணியிலும் ஆலம் பழத்திற்குப் புதுக்கலம் உவமையாக
வந்துள்ளமை காண்க. (12)

பருவமா யிரங்கழிந்
தொருவமாட மதுரையெங்
குரவனெண் குணத்தினான்
திருவுளந் திரும்பினான்.

     (இ - ள்.) ஆயிரம் பருவம் கழிந்து ஒருவ - ஆயிரம் ஆண்டும்
கழிந்துபோக, மாடமதுரை எம் குரவன் - மாடங்கள் நிறைந்த மதுரையின்கண்
எழுந்தருளியுள்ள எம் குரவனும், எண் குணத்தினான் - எட்டுக் குணங்களை
யுடையவனுமாகிய சோமசுந்தரக் கடவுள், திருவுளம் திரும்பினான் - தனது
திருவுளத்திற் கருணை கொண்டருளினான்.

     பருவம் என்றது ஈண்டு ஆண்டினை. நீங்க அதன்பின் என்க. உளந்
திரும்புதல் - கருணை கூர்தல். (13)

தன்னதிச்சை கொண்டதோர்
இன்னருட் குரவனாய்
அந்நெடுங்க லாயினார்
முன்னர்வந்து தோன்றினான்.

     (இ - ள்.) தன்னது இச்சை கொண்டது ஓர் இன் அருள் குரவனாய் -
தனது இச்சையினாலே திருமேனி கொண்டருளிய இனிய கருடைிணக்
குரவனாகி, அந்நெடுங்கல் ஆயினார் முன்னர் வந்து தோன்றினான் - நீண்ட
கருங்கல்லாய்க் கிடக்கும் அப்பெண்களின் முன்வந்து தோன்றியருளினான்.