|
(இ
- ள்.) அறவும் சிறிய உயிர் தொறும் - மிகவும் நுண்ணிய
உயிர்கள் தோறும், தான் பரமகாட்டை அணுவாய்ச் சென்று உறையும் சிறுமை
அணிமா ஆம் - தான் (சிறுமையில்) முடிவாகிய கரமாணுவாய்ச் சென்று
தங்கும் நுண்மையே அணிமாவாகும்; நிரம்பிய நூல் - பொருள் நிரம்பிய
நூல்கள், உவரி ஞால முதல் மேல் என்று அறையும் சிவ அந்தம் ஆறாறும் -
கடல் சூழ்ந்த நில முதலாக எல்லாவற்றினும் மேல் என்று கூறப்படும் சிவம்
ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின், உள்ளும் புறனும் அகலாது நிறையும்
பெருமைதனை - அகத்தும் புறத்தும் நீங்காது உறையும் பெருமையை, மகிமா
என்னும் - மகிமா என்று கூறாநிற்கும்.
காட்டை
- முடிவு; வரம்பு. பிருதிவி தத்துவத்தை ஞாலம் என்றதற்
கேற்ப உவரியென அடைகொடுத்துக் கூறினார். சிவம் - சிவதத்துவம்.
சிவாந்தம் : நெடிற்சந்தி. நிரம்பிய நூல் - மெய்ந்நூல். அன்று, ஓ : அசைகள். (23)
இலகு மேரு
பாரம்போ லிருக்கும் யோகி தனையெடுத்தால்
இலகு வான பரவணுப்போ* லிருப்ப திலகி மாவாகும்
இலகு வான பரவணுப்போ லிருக்கும் யோகி தனையெடுத்தால்
இலகு மேரு பாரம்போ லிருப்ப தன்றோ கரிமாவாம். |
(இ
- ள்.) இலகு மேரு பாரம்போல் இருக்கும் யோகிதனை எடுத்தால்
- விளங்கா நின்ற மேருமலையின் பாரம்போலக் கனத்திருக்கும் யோகியை
எடுத்தால், இலகு ஆன பர அணுப்போல் இருக்கது இலகிமா ஆகும் -
இலேசான பரமாணுவைப் போலக் கனமற்று இருப்பது இலகிமாவாம்; இலகு
ஆன பர அணுப்போல் இருக்கும் யோகிதனை எடுத்தால் - இலேசான
பரமாணவைப்போல மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால், இலகு மேரு
பாரம்போல் இருப்பது கரிமா ஆம் - விளங்கா நின்ற மேரு மலையின்
கனம்போலக் கனமாக இருப்பது கரிமாவாம்.
அன்று,
ஓ : அசைகள். தூலம் என்பது பாடமாயின் பஞ்சு என்பது
பொருளாம். (24)
பிலத்தி லிருந்தோ னயனுலகிற் புகுதன் மீண்டும் பிலமடைதல்
பலத்தின் மிகுந்த பிராத்தியதாம் பரகா யத்தி னண்ணுதல்வான்
புலத்தி னியங்க லிச்சித்த போக மனைத்துந் தானிருக்குந்
தலத்தி னினைந்த படிவருதல் பிராகா மியமாந் தவக்கொடியீர். |
(இ
- ள்.) தவக் கொடியீர் - தவக்கொடிபோலும் நங்கையீர்,
பிலத்தில் இருந்தோன் அயன் உலகில் புகுதல் - பிலத்தின்கண் இருந்தவன்
பிரமனுலகில் அடைதலும், மீண்டும் பிலம் அடைதல் - மீளவும் பிலத்திற்
(பா
- ம்.) * இலகுவான தூலமென.
|