II


250திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



தொழவேண்டுமென்னும் ஆசை மேலே பொங்கி எழுதலால் அதிகரித்
தெழுகின்ற அன்புடையனாகி, மதுரேசன் மின்னு பொலம் கழல்
பங்கயயப்பதம் - மதுரைப்பிரானின் விளங்குகின்ற பொன்னலாகிய
வீரக்கழலணிந்த தாமரை மலர்போலுந் திருவடிகளை, நான் என்று பணிவேன்
எனப் பரிவு எய்தி - யான் என்று கண்டு வணங்குவேன் எனப் பரிவுகூர்ந்து,
கயல்புரை கண்ணி பங்கனை உன்னி - கயல்போலும் கண்களையுடைய உமை
பாகனாகிய அப்பெருமானைச் சிந்தித்துக் கொண்டே, கங்குலில் துயில்வான் -
இரவில் உறங்குவானாயினன்.

     பரிவு - அன்பு, துன்பம். கயற்புரை கண்ணிபங்கன் என்பதனைச்
சுட்டாகக் கொள்க. (6)

அன்று செம்பியர் கோம கன்கன வின்க ணேயருள் வெள்ளிமா
மன்று ணின்றவர் சித்த ராயெதிர் வந்து மன்னவ நின்னுளத்
தொன்று மஞ்ச லொருத்த னாகி யுருத்தி ரிந்துத னித்துவந்
தின்று வந்தனை செய்து போதி யெனப்பு கன்றன ரேகினார்.

     (இ - ள்.) அன்று - அப்பொழுது, செம்பியர் கோமகன் கனவின் கண்
- காடு வெட்டி என்னும் சோழர் பெருமானது கனவினிடத்து, அருள்
வெள்ளி மாமன்றுள் நின்றவர் சித்தராய் எதிர் வந்து - அருள் மயமாகிய
பெரிய வெள்ளியம்பலத்திலே நின்றருளிய இறைவர் சித்த மூர்த்தியாய் எதிரே
வந்து, மன்னவ - அரசனே, நின் உளத்து ஒன்றும் அஞ்சல் - நின்
மனதின்கண் சிறிதும் அஞ்சற்க; ஒருத்தனாகி உருதிரிந்து - நீ ஒருவனாய்
மாறுவேடம் பூண்டு, தனித்து வந்து இன்று வந்தனை செய்து போதி என -
துணையின்றி வந்து இன்று வணங்கிப் போவாயாக என்று, புகன்றனர்
ஏகினார் - திருவாய்மலர்ந்தருளிச் சென்றனர்.

     போதி, த் : எழுத்துப்பேறு. புகன்றனர் : முற்றெச்சம். (7)

கேடடு வேந்தன் விழித்து ணர்ந்து கிளர்ந்த வற்புத னாகிய
ஈட்டு சேனை யமைச்சு ளார்பிறர் யாரு மின்றி வழிக்கொளீஇ
நாட்ட மூன்றவ னாம வாள்கொடு நல்ல ருட்டுணை யாய்வழி
காட்ட வன்பெனு மிவுளி மேல்கொடு கங்குல் வாய்வரு வானரோ.

     (இ - ள்.) வேந்தன் கேட்டு விழித்து உணர்ந்து - சோழமன்னன்
(அவ்வருளிப் பாட்டினைக்) கேட்டு விழித்து அறிந்து, கிளர்ந்த அற்புதனாகி -
மிக்க வியப் புடையவனாய், ஈட்டு சேனை அமைச்சுளார் பிறர் யாரும் இன்றி -
தொகுக்கப்பட்ட சேனைகளும் மந்திரிகளும் வேறு யாரும் இல்லாமல்,
கங்குல்வாய் - அவ்விரவிரேயே, நல் அருள் துணை யாய் வழிகாட்ட - நல்ல
திருவருள் துணையாய் நின்று வழிகாண்பிக்க, அன்பு எனும் இவுளி
மேல்கொடு - அன்பு என்னுங் குதிரையிலேறி, நாட்டம் மூன்று உடையவன்
நாமவாள் கொடு - கண்கள் மூன்றுடைய இறைவனது திருநாமமாகிய
திருவைந்தெழுத்தென்னும் வாட்படையேந்தி, வழிக்கொளீஇ வருவான் -
வழிக்கொண்டு வருவானாயினன்.