II


258திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



மறுத்த வுண்டியன் மாமலர்ப் பாயலை
வெறுத்த கன்றரை மேற்பள்ளி கொள்ளவும்
பொறுத்த னன்றுயின் றானிருட் போழ்தினிற்
கறுத்த கண்டர் கனவினிற் கூறுவார்.

     (இ - ள்.) மறுத்த உண்டியன் - உணவை மறுத்தவனாய், மாமலர்ப்
பாயலை வெறுத்து பெருமை பொருந்திய மலர்ப்படுக்கையை வெறுத்து, அகன்
தரைமேல் பள்ளிகொள்ளவும் பொறுத்தனன் துயின்றான் - அகன்ற தரையின்
மீது பள்ளி கொள்ளவும் மனம் பொறுத்து உறங்கினன்; இருள் போழ்தினில் -
இருட் போதில், கறுத்த கண்டர் கனவினில் கூறுவார் - கரிய
திருமிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுள் கனவில்கண் வந்து
கூறியருளுவார்.

     உணவு மறுத்தல் - உணவுண்ணாமை. மலர்ப்பாயல் - பூவணை; மலர்
பரப்பிய பாயலுமாம். மலரணையிற் றுயிலுதற் குரியோர் தரையிற் றுயிலுதல்
அரிதாகலின் ‘பொறுத்தனன் றுயின்றான்’ என்றார். இருட் போழ்தினில்
கனவினிற் கூறுவார் என்க; இருட் போழ்துபோலக் கறுத்த கண்டம்
என்றுமாம்.பொறுத்தனன் ; முற்றெச்சம். (24)

மட்ட லம்பிய தாதகி மாலையான்
உட்ட தும்பி யொழுகிய வன்பினாற்
கட்டி லங்கெயிற் கச்சியிற் காடெலாம்
வெட்டி நம்புடை வித்திய பத்தியான்.

     (இ - ள்.) பட்டு அலம்பிய தாதகி மாலையான் - தேன் சிந்தும்
ஆத்தி மாலையை யணிந்த சோழன், உள் ததும்பி ஒழுகிய அன்பினால்
உள்ளத்தில் நிறைந்து வழிந்த அன்பினாலே, கட்டு இலங்கு எயில் கச்சியில் -
காவலாக விளங்கும் மதிலையுடைய காஞ்சிமா நகரின்கண், காடு எலாம்
வெட்டி நம்புடை வித்திய பத்தியான் - காடு அனைத்தையும் வெட்டி
நம்மிடத்தும் பத்தியாகிய விதையை விதைத்தவன்.

     கட்டு - காவல் என்னும் பொருட்டு; கட்டப்பட்ட என்றுமாம்.
காடெலாம் வெட்டி என்றதற்கேற்பப் பத்தி வித்தியவன் என்றார்; காட்டினை
அழித்து நாடாக்கி அந்நாடு முழுதும் சிவபத்தி வளரச் செய்தவன் என்பது
கருத்து. (25)

வந்து நம்மை வழிபட வேண்டினான்
இந்த வாயி றிறந்தழைத் தின்னருள்
தந்து மீள விடுத்துப்பின் றாட்கொளீஇ
நந்த மால்விடை நாம்பொறித் தேமெனா.

     (இ - ள்.) வந்து நம்மை வழிபட வேண்டினான் - (அவன் இங்கு)
வந்து நம்மை வணங்க விரும்பினான், நாம் இந்த வாயில் திறந்து - நாம்
இந்த வடக்கு வாயிலைத் திறந்து, அழைத்து இன் அருள் தந்து - (அவனை
உள்ளே) அழைத்து இனிய அருள் பாலித்து, மீள விடுத்து பின் தாள்