|
என்றார். அரச சிங்கம்
- இராச சிம்மன். தமையனுக்கு மனைவியாக
வரையறுக்கப் பட்டவள் தனக்கு அன்னை போல்வாளாகவும் அவளை
மணக்கக் கருதினமையின் பழியஞ்சா தான் என்றார். (4)
காஞ்சிப்
பதிமுன் குறுகுமிளங் காவ லோனைக் கடற்சேனை
தாஞ்சுற் றியவந் தெதிர்கொடுபோய்த் தன்முன் றனக்கென் றிருந்தமகள்
ஆஞ்சிற் றிடையை மணம்புணர்த்தி யந்த மருகற் கரசுநிலை
வாஞ்சித் தரச புரந்தரனைப் பிடிக்க மதித்தான் வனமெறிந்தான். |
(இ
- ள்.) காஞ்சிப்பதிமுன் குறுகும் - காஞ்சி நகரை நோக்கி
வரும்,இளங்காவலோனை, சிற்றரசனாகிய அரச சிங்கனை, வனம்
எறிந்தான் - காடு வெட்டிய சோழன், கடல்சேனை தாம் சுற்றிய வந்து
எதிர்கொடுபோய் - கடல்போன்ற சேனைகள் சூழ எதிர்வந்து அழைத்துச்
சென்று, தன் முன் தனக்கு என்று இருந்த மகள் ஆம் சிற்றிடையை -
அவன் தமையனுக்கு என்று வரையறுத்திருந்த சிறிய இடையை
யுடையவளாகிய தன் புதல்வியை, மணம் புணர்த்தி - மணம் புரிவித்து,
அந்த மருகற்கு அரசு நிலை வாஞ்சித்து - அந்த மருமகனுக்கு அரசுரிமை
(கிடைத்தலை) விரும்பி, அரச புரந்தரனைப் பிடிக்க மதித்தான் -
இராசேந்திரனைப் பிடிக்கக் கருதினான். சுற்றிய : செய்யிய வென்னும்
வினையெச்சம். அவன்றன் முன்றனக்கு என்க. வனமெறிந்தான் : பெயர். (5)
|
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
மரும
கன்ற னுடனெ ழுந்து மாம னான வளவர்கோன்
பொரும கன்ற சேனை யானை புடைநெ ருங்க மதிவழித்
திரும கன்றன் மேல மர்த்தி றங்கு றித்து முரசறைந்
துரும கன்ற பலலி யம்மொ லிப்ப வந்து ளானரோ. |
(இ
- ள்.) மாமனான வளவர்கோன் - மாமனாகிய சோழ மன்னன்,
மருமகன் உடன் எழுந்து - மருமகனோடு புறப்பட்டு, பொரும் அகன்ற
சேனை யானை புடை நெருங்க, போர் செய்தற்குரிய பரந்த சேனையும்
யானையும் பக்கத்தில் நெருங்கிவர, மதிவழித் திருமகன்மேல் அமர்த்திறம்
குறித்து - சந்திரன் மரபினனாகிய இராசேந்திர வழுதியின்மேல் போர்
செய்தலைக் குறித்து. முரசு அறைந்து - முரசு அறைவித்து, உரும் அகன்ற
பல்இயம் ஒலிப்ப வந்துளான் - இடியும் அஞ்சி அகலுதற் கேதுவாகிய பல
இயங்களும் ஒலிப்ப வந்தனன்.
சிறப்பு
நாக்கி யானையை வேறு பிரித்துச் சேனை யானை என்றார்.
மருமகன்றன், திருமகன்றன் என்பவற்றில் தன் : சாரியை. அகன்ற -
அகலுதற்கேதுவாகிய. அரோ : அசை. (6)
|