|
(இ
- ள்.) மடலின் நீடு தார் அலங்கல் மன்னர்சேனை - இதழ்கள்
பொருந்திய (மண) மிக்க மாலையை யணிந்த இரண்டு மன்னர்களின்
சேனைகளும், இன்னவாறு - இவ்வகையாக, உடலின் நீழல் அடியகத்து
ஒடுங்க - உடம்பின் நிழல் அடியின்கண் ஒடுங்குமாறு, உம்பர் உச்சியில்
- வானின் நடுவிடத்திற்கு, கடலின் நீடு கதிர் பரப்பு கடவுள் எய்தும்
அளவும் - கடல்போல அளவின்றிப் பரந்த கிரணங்களை வீசுகின்ற
சூரியன் வரும் அளவும் அடலின் நீடி நின்று இடைவிடாமல் அமர்
உழந்து - வெற்றியில் மிக்கு நின்று இடைவிடாது போர் செய்தன.
சேனை
இன்னவாறு எய்துமளவும் நின்று அமருழந்த தென்க. சேனை
என்றதற்கேற்ப உழந்ததென ஒருமையாற் கூறினார். ஆல், அரோ என்பன
அசைகள். (22)
அந்த நாள னைத்தையும் மழிக்க நின்ற வரனுதற்
சிந்து தீயெ னக்கனன் றுருத்து நின்று தெறுதலால்
எந்த யாறு மறவறப்ப விம்ப ரன்றி யும்பரும்
வெந்து வான யாறும்வற்ற வேனில் வந்தி றுத்ததால். |
(இ
- ள்.) அந்தம் நாள் - முடிவுநாளில், அனைத்தையும் அழிக்க
நின்ற - எல்லாவற்றையும் அழிக்குமாறு நின்ற, அரன் நுதல் சிந்து தீ என -
உருத்திரமூர்த்தியின் நெற்றியினின்று சிந்திய தீயைப்போல, கனன்று
உருத்துநின்று தெறுதலால் - (ஞாயிறு) கொதித்துச் சினந்து நின்று எரித்தலால்,
எந்த யாறும் அறவறப்ப - எல்லா நதிகளும் முற்றும் வற்ற, இம்பர் அன்றி
உம்பரும் வெந்து - இந்நிலவுலகமல்லாமல் வானுலகும் கருகி, வானயாறும்
வற்ற - ஆகாய கங்கையும் வற்ற - வேனில்வந்து இறுத்தது - வேனிற்
பொழுது வந்து தங்கியது.
அந்த
நாள் - உக முடிவாகிய நாள்; அந்நாளில் வேனில் வந்திறுத்தது
என்றுமாம். நுதல் - நுதற்கண்; ஆகுபெயர். ஆல் : அசை. (23)
மண்பி ளந்து பிலநுழைந்து வரைபி ளந்து நிரையவாய்
எண்பி ளந்து நின்றபொங்க ரிலையு கப்பி ளந்துமேல்
விண்பி ளந்து பரிதிநீடு வெங்க ரங்கள் யாரையுங்
கண்பி ளந்த ழன்றுவீசு கான லெங்கு மானதே. |
(இ
- ள்.) பரிதி நீடு வெங்கரங்கள் - சூரியனுடைய நீண்ட வெய்ய
கிரணங்கள், மண்பிளந்து - நிலவுலகைப் பிளந்து, பிலம் நுழைந்து -
பாதலவுலகிற் சென்று, வரைபிளந்து - மலைகளைப் பிளந்து, நிரைய வாய்
எண்பிளந்து நின்ற பொங்கர் - ஒழுங்குபட்டனவாய் அளவிறந்து நின்ற
சோலைகளின், இலை உகப்பிளந்து - இலைகள் உதிருமாறு வெதுப்பி, மேல்
விண்பிளந்து - மேலுள்ள வானுலகையும் பிளந்து, யாரையும் கண்பிளந்து -
யாவரையும் கண்ணைப் பிளந்து, அழன்று வீசுகானல் - கொதித்து வீசும்
கானல், எங்கும் ஆனது - எவ்விடத்தும் ஆயிற்று.
எண்
பிளந்து - எண்ணைக் கடந்து. இலை உக மரக்கோடுகளைப்
பிளந்தென்றுமாம். கண் பிளந்து என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு
முடிபாயிற்று; யாருடைய கண்ணையும் என மாற்றி யுரைத்தலுமாம்.
|