II


தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்273



     (இ - ள்.) கானல் தேர்மேல் - கானலாகிய தேரின்மேல், சூறைக் கால்
எனும் பாகன் தூண்ட - சூறைக்காற்று என்னும் பாகன் செலுத்த, வேனில்
வேந்து ஏறி - வேனிலாகிய வேந்தன் ஏறி, சீறி வெப்பமாம் படைகள் வீச
சினந்து வெப்பமாகிய படைக்கலங்களை வீச, மாநிலம் காவல் பூண்ட
மன்னவர் இருவர் தங்கள் தானையும் உடைந்து - பெரிய நிலவுலகத்தை
மேற்கொண்ட இரண்டு மன்னர்களின் சேனையும் (அவ் வெம்மைக்குத்)
தோற்று, தண்ணீர் நசைசுட சாம்பிற்று - நீர் வேட்கை வருத்த வாடியது.

     வேனிற் காலத்தில் கானலுத் சூறைக்காற்றும் வெப்பமும் மிக்கமையை
இங்ஙனங் கூறினார். அம், அன்று, ஏ : அசைகள். கானல் முதலியவற்றைத்
தேர் முதலியவாக உருவகப் படுத்தினமையால் இஃது உருவகவணி. (27)

இரக்கமில் கொடிய செல்வர் மருங்குபோ யிரப்பார் போல
உருப்பமொண் டிறைக்குங் கள்ளி நீழல்புக் கொதுங்கு வாரும்
தருக்கற நிரப்பா லெய்த்தோர் தம்மினும் வறியர் பாற்சென்
றிரப்பபோ லிலைதீந் துக்க மரநிழ லெய்து வாரும்.

     (இ - ள்.) இரக்கம் இல் கொடிய செல்வர் மருங்குபோய் - இரக்க
மற்ற கொடிய செல்வரிடஞ் சென்று, இரப்பார்போல - இரப்பவரைப் போல,
உருப்பம் கொண்டு இறைக்கும் - வெப்பத்தை முகந்து வீசுகின்ற, கள்ளி நீழல்
புக்கு ஒதுங்குவாரும் - கள்ளி நிழலிற் சென்று ஒதுங்குப வரும், தருக்கு அற
நிரப்பால் எய்த்தோர் - களிப்பு நீங்க வறுமையால் மெலிந்தோர்கள்,
தம்மினும் வறியர்பால் சென்று இரப்பபோல் - தம்மைக் காட்டிலும் வறுமையை யுடையாரிடஞ் சென்று இரத்தலைப் போல, இலை தீந்து உக்க மரம் நிழல்
எய்துவாரும் - இலைகள் உதிரப் பட்ட மரத்தின்கண் நிழலுக்குச் செல்பவரும்.
உருப்பம் - வெப்பம். மொண்டு, முகந்து என்பதன் மரூஉ. உருப்ப
மொண்டிறைக்கும் என்னும் பொருளடையால் கொடிய செல்வர் கடுஞ்
சொற்களைப் பெய்வரென்பது பெறப்படும். இரப்ப : தொழிற் பெயர். குளகம்.
(28)

கொல்லிபம் பரிமான் றேரின் குறுநிழ லொதுங்கு வாரும்
அல்லிருள் வட்டத் தோல்வெண் கவிகையு ளடங்கு வாருஞ்
செல்லிடம் பிறிது காணார் வீரவான் சென்றோர் நின்ற
கல்லுட்* னிழல்சேர் வாரு மாயினார் களம ரெல்லாம்.

     (இ - ள்.) கொல் இபம் பரிமான் தேரின் - கொல்லுதற் றொழிலை
யுடைய யானையும் குதிரையும் தேருமாகிய இவற்றின், குறுநிழல்
ஒதுங்குவாரும் - சிறு நிழலில் ஒதுங்குகின்றவரும், அல் இருள் வட்டத் தோல்
வெண்கவிகையுள் அடங்கு வாரும் - மிக்க இருள் போன்ற கேடகத் துள்ளும்
வெள்ளிய குடையினுள்ளும் சென்று ஒடுங்குவாரும், செல் இடம் பிறிது
காணார் - செல்லுதற்கு இடம் வேறு காணாதவராய், வான் சென்றார்


     (பா - ம்.) * கல்லிடை.