II


276திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) சுந்தரப் புத்தேள்வைத்த - சோமசுந்தரக் கடவுள்
வைத்தருளிய, துருமலர் சாவத் தெள்நீர்ப் பந்தர்புக்கு அடைந்து - மணமிக்க
மலரால் மணம் ஊட்டிய தெளிந்த நீரினையுடைய பந்தர் சென்று அடைந்து,
நல்நீர்பருகி - நல்ல நீரினைப் பருகி, எய்ப்பு அகல - இளைப்பு நீங்க,
ஆற்றல் வந்தபின் - முன் இழந்த வலிமை மீண்ட வளவில், செழியன்
தன்னோர் - பாண்டியன் சேனைவீரர், வளவன்மேல் ஏறி - சோழன்மேற்
போருக்கெழுந்து, சீறி - சினந்து, அந்தம்இல் அனிகம் சிந்தி - அளவிறந்த
அவன் படைகள் சிதறும்படி, தும்பை வேய்ந்து அடுபோர் செய்தார் -
தும்பைமாலை யணிந்து கொல்லுதலையுடைய போரினைப் புரிந்தனர்.

     வீறு - நெருங்கிய, தன்னோர் - தமர்; படைவீரர். சிந்த வென்பது
சிந்தியெனத் திரிந்து நின்றது. அடுபோர் செய்து சிந்தினார் என விகுதி
பிரித்துக் கூட்டலுமாம். (33)

கடலுடைந் தென்னப் பொன்னிக் காவலன் றானை சாய
மடலுடை வாகை வேய்ந்து வளவனை மருக னோடும்
மிடலுடைத் தறுகட் சேனை வீரர்வெங் கையாற் பற்றி
அடலுடைக் கன்னி நாடர்க் கரசன்முன் கொண்டு போந்தார்.

          (இ - ள்.) கடல் உடைந்து என்ன - கடற்பெருக்கு நிலை கடந்து
புறம் போனாற்போல, பொன்னி காவலன் தானை சாய - காவிரியை யுடைய
சோழ மன்னன் சேனைகள் புறங்கொடுக்க, மடல் உடை வாகை வேய்ந்து -
இதழ்களையுடைய வாகை மாலை சூடி, வளவனை மருகனோடும் - காடு
வெட்டிய சோழனை அவன் மருமகனாகிய இராச சிங்க பாண்டியனோடு,
மிடல் உடைத் தறுகண் சேனை வீரர் - வலிமை யுடைய அஞ்சாமை மிக்க
படை வீரர்கள், வெங்கையால் பற்றி - தம் வெவ்விய கையாற் பிடித்து,
அடல் உடைக் கன்னி நாடர்க்கு அரசன் முன் - வெற்றியையுடைய கன்னி
நாட்டிலுள்ளவர்கட்கு அரசனாகிய இராசேந்திர பாண்டியன் முன்பு,
கொண்டுபோந்தார் - கொண்டு வந்தனர்.

     கடல் போலுஞ் சேனையாகலின் அது நிலை கெட்டோடுதலைக்
கடலுடைந் தென்ன என்றார். உடைந்ததென்ன என்பது விகாரமாயிற்று.
மடலுடை வாகை, சினைக்கேற்ற அடையடுத்தது. அடலுடை அரசன் என்க.
(34)

கொடுவந்த வளவன் றன்னைக் கோப்பெருஞ் செழியர் கோமான்
வடுவந்த தம்பி யோடு மாடநீள் கூடன் மேய
கடுவந்த மிடற்றார் முன்போய் விடுத்தெந்தை கருத்தியா தென்ன
நடுவந்த நிலையான் கேட்ப நாயக னிகழ்த்து மன்னோ.

     (இ - ள்.) கோப்பெரும் செழியன் கோமான் - பெரிய தலைமையை
யுடைய செழியர் பெருமானாகிய இராசேந்திர பாண்டியன், கொண்டு வந்த
வளவன் தன்னை - அங்ஙனங் கொண்டு வரப்பட்ட சோழனை, வடுவந்த
தம்பியோடு - (தனது குடிக்கு) வடுவாகத் தோன்றிய தம்பியோடு, மாடம்நீள்
கூடல்மேய - மாடங்கள் மிக்க கூடலில் எழுந்தருளிய, கடுவந்த மிடற்றார்