II


296திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



என்போன் - ஆயிரங் குதிரைகட்கு ஒரு சேவகனென்று சொல்லப்படுவோன்,
தானே வெல்லுமாறு எண்ணி - தானே வெற்றி பெறுமாறு துணிந்து, வஞ்சி
வேய்ந்து கொண்டு எழுந்து போந்தான் - வஞ்சிமாலை சூடிப் புறப்பட்டு
வந்தான்.

     கல்லு - மலை; உ : சாரியை; கல்லுடன் என விரிக்க. கல்லு மாறு -
மலை தோற்கும்படியான என்றுரைத்தலுமாம். கருவி - படை. சேவக
னென்போனாகிய ஒருவன் என்க. தானே - வேறு துணையின்றியே.
ஆயிரம் பரிக்கோர் சேவகன் என்பது சிறப்பினாய பெயர். (7)

பல்வகைக் கருவி யீட்டப் படையொடும் பரவை சீறிச்
செல்வது போலக் கன்னித் தீம்புன னாடு நோக்கி
மல்வரை யாத தோளான் வரவறிந் தெழுந்து மேருக்
கல்வரி சிலையான் முன்போய்க் கைதவன் றாழ்ந்து கூறும்.

     (இ - ள்.) பல்வகைக் கருவி ஈட்டப் படையொடும் - பல்வகைப்
படைக்கலங்களை ஏந்திய சேனையோடும், பரவை சீறிச் செல்வது போல -
கடலானது சினந்து செல்வது போல, கன்னித் தீம்புனல் நாடு நோக்கி -
இனிய பொருநை யாற்றின் நீரையுடைய கன்னி நாட்டை நோக்கி, மல்
வரையாத தோளான் வரவு - மற்போர் நீங்காத தோளையுடைய சோழன்
வருதலை, கைதவன் அறிந்து எழுந்து - பாண்டியன் (ஒற்றரால்) அறிந்து
எழுந்து, மேருக்கல் வரிசிலையான் முன்போய் - மேருமலையைக்
கட்டமைந்த வில்லாகக் கொண்ட இறைவன் திருமுன் சென்று, தாழ்ந்து
கூறும் - வணங்கிக் கூறுவான்.

     கருவி - படைக்கலப் பொது. செல்வது போல வரவு என்க. மேருக்கல்
- மேருமலை. (8)

பொன்னது வனைய வேணிப் புனிதவிப பூமி நேமி
உன்னது வலத்தி னாலே யுருட்டுமென் வலத்தை நோக்கான்
தன்னது வலத்தி னாலென் றானையின் சிறுமை நோக்கி
என்னது தேயங் கொள்வா னெண்ணினான் போலு மன்னோ.

     (இ - ள்.) பொன் அணைய வேணிப் புனித - பொன்போன்ற
சடையையுடைய புனிதனே, இப்பூமி - இநநிலவுலகில், உன்னது வலத்தினாலே
நேமி உருட்டும் - உன்னுடைய திருவருள் வலியால் ஆணைத் திகிரியை
உருட்டுகின்ற, என் வலத்தை நோக்கான் - என் வலிமையைக் கருதாது, என்
தானையின் சிறுமை நோக்கி - எனது சேனையின் குறையை மட்டுங் கருதி,
தன்னது வலத்தினால் - தன்னுடைய வலியினால், என்னது தேயம் கொள்வான் - எனது நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்கு, எண்ணினான் போலும் -
கருதிப் போலும்.

     பொன்னது, து : பகுதிப்பொருள் விகுதி. பூமியில் நேமி யுருட்டும்
என்க. வலம் - வலிமை. உன்னது முதலிய மூன்றிலும் னகரம் விரித்தல்.
நோக்கான் : முற்றெச்சம். கொள்வான் : வான் ஈற்று வினையெச்சம்.
எண்ணிப்போலும் காவிரி நாடன் மேவினன் என வருஞ் செய்யுளோடு
முடியும். மன், ஓ : அசைகள. (9)