II


நான்மாடக்கூடலான படலம் 3



     வாக்கின் சேயிழை - வாக்கிற்குரிய சேயிழை; சேயிழை - செவ்விய
அணிகளையுடையாள். ஞானப் பெருமகள் - உமை; அவள் ஞானந்
தருதற்குரியளாதலை,

"ஆகமங்ன ளெங்கே யறுசமயந் தானெங்கே
யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்
தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு"

என்று திருக்களிற்றுப்படியார் கூறுவது கொண்டு அறிக. இம்மூன்று
சத்திகளையும் இங்ஙனமே இவ்வாசிரியர், திருநகரச் சிறப்பின்கண்,

‘திரும கட்கொரு தாமரைக் கூடமே திருமான்
மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந்
தரும கட்கியோ கத்தனிப் பீடமே’

என எடுத்துரைத்தமை காண்க. சிவபெருமான் ஒருவனே வெவ்வேறுருவில்
வேறு வேறு பேர் பெற்று நின்று படைப் பாதித் தொழில்களை நடத்துமாறு
போலச் சிவசத்தி யொருத்தியே வெவ்வேறுருவில் அவ்விறைவன் புரியுந்
தொழில்கட்குத் துணையாய் நின்று - உயிர்கட்குப் போகம் வீடருளுவளென்க;
இந்நூலிலே முன்,

"ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற வேறு  வேறுபேர் பெற்றென"

என்றும்,

"பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம்  படைத்துக்காத்து வரையாது துடைத்து மறைந்தருளி"

என்றும் கூறப்பெற்றமையும் நோக்குக. திருமகளாற் செல்வமும் வாக்கின்
சேயிழையாற் கல்வியும், ஞானப்பெருமகளால் வீடும் அளிப்பாள் என
நிரனிறையாகக் கொள்க; எனவே திருமகள் முதலியோரால் அளிக்கப்படுவன
வெல்லாம் சிவசத்தியால் அளிக்கப்படுவனவேயாமென்க. இவ்விரண்டு
செய்யுளும் பொருளியல்பு கூறிய வாழ்த்துக்களாம்.(2)

கதிர்மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருண னேய
அதிர்கடல் வறப்பச் செய்த வாடலீ தனையா னேய
முதிர்மழை யேழின் மேலு முன்னைநான் முகிலும் போக்கி
மதுரைநான் மாடக் கூட லாக்கிய வண்ணஞ் சொல்வாம்.

     (இ - ள்.) கதிர்மதி மிலைந்த வேணிக்கண்ணுதல் - ஒளி பொருந்திய
சந்திரனைத் தரித்த சடையினையுடைய சோமசுந்தரக் கடவுள், வருணன் ஏய
அதிர்கடல் வறப்பச்செய்த ஆடல் ஈது - வருணன் ஏவிய ஒலிக்கின்ற கடலை
வற்றச்செய்த திருவிளையாடல் இது; அனையான் ஏய - (இனி) அவ்வருணன்
ஏவிய, முதிர் மழை ஏழின் மேலும் - சூல் முதிர்ந்த ஏழு