ஆனாலு மிப்போ தணிகான்மிர நாட்டிற் காசி
தானா மருக்குந் தலமாகு மநாத ராகி
ஆனாத பிச்சைப் பெருவாழ் வுடையார் நமரா
நாணாளும் விஞ்சை நடாஅய்த்திரி* சித்த ரேம்யாம். |
(இ
- ள்.) ஆனாலும் இப்போது - ஆயினும் இப்பொழுது, அணி
கான்மிர நாட்டில் காசிதான் - அழகிய காசுமீர நாட்டின்கண் உள்ள
காசிப்பதியே, நாம் இருக்கும் தலம் ஆகும் - நாம் தங்கும் பதியாகும்;
அநாதராகி ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமராம் - ஒரு
பற்றுமில்லாதவராய் நீங்காத பிச்சை எடுத்தலாகிய பெருவாழ்வினை யுடைய
அடியார்களே நம் உறவின ராவர்; யாம் நாள் நாளும் விஞ்சை நடா அய்த்
திரி சித்ததேம் - யாம் எந்நாளும் வித்தை நடாத்தித் திரிகின்ற சித்தராவேம்.
ஆனாலும்
- எங்குந் திரிவமாயினும். கான்மிரம் - காசுமீரம். அநாதர்
-ஆதரவில்லாதவர்; அநாதரர் என்பது தொக்கு நின்றது. எய்துதற்கரிய
வாழ்வென்பார் பெருவாழ்வு என்றார். நாள் நாளும் - நாடோறும். நடாஅய்
- நடாவி; நடாத்தி. அநாதனாகி . . . . . வாழ்வுடையான் என்பது
பாடமாயின், ஆதியில்லாத சிவபெருமான் எமக்கு உறவாம் என்றுரைக்க. (7)
ஆனந்த கானந் தொடுத்திங்குள வான சைவத்
தானம் பலவுந் தொழுதற்பர மாகி வந்தேம்
ஞானந் தருமிந் நகரிம்மையிற் சீவன் முத்தி
மானந் தாமன பரமுத்தி மறுமை நல்கும். |
(இ
- ள்.) ஆனந்த கானம் தொடுத்து இங்கு உளவான சைவத் தானம்
பலவும் - தில்லைவனம் முதல் இங்கு உள்ளனவான சிவத்தலங்கள் பலவும்,
தொழுதற் பரம் ஆகி வந்தேம் - வணங்குதற் பொருட்டு வந்தேம்; ஞானம்
இந்நகர் - ஞானத்தைப் பாலிக்கும் இந்த நகரமானது, இம்மையில் சீவன்
முத்தி - இம்மையிலே சீவன் முத்தியையும், மறுமை மான் அந்தமான
பரமுத்தி - மறுமையிலே மாயைக்கு அப்பாற்பட்ட பரமுத்தியையும், நல்கும்
- அளிக்கும்.
தில்
என்னும் இடைச்சொல் விழைவுப் பொருளில் வருதல் குறித்துத்
தில்லை வனம் என்பதை ஆனந்த கானம் என மொழிபெயர்த்தாராதல்
வேண்டும்; தில்லை சிவபெருமான் ஆனந்தத் தாண்வடம் புரியும் இடமாதலுங்
கொள்க; ஆனந்த கானம் என்பதற்குக் காசி என்று பொருள் கூறுவாரு
முளர். பரம் - பொருட்டு. மான் - பிரகிருதி மாயை; ஈண்டு விந்து
மோகினிகளையும் குறிப்பதாகக் கொள்க. (8)
ஈண்டுள்ள
வர்க்கெம் விளையாடலைக் காட்டி யிச்சை
வேண்டும் பலசித் தியுநல் குவம் வேத மாதி
மாண்டங்கு மெண்ணெண் கலைஞானமும் வல்ல மல்லாற்
சேண்டாங்கு மெல்லாப் பொருளும்வல சித்த ரேம்யாம். |
(பா
- ம்.) * நடாத்திடுஞ்.
|