II


306திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பெறும் அடியார்க்கு நல்லான், வில் ஏர் உழவன் கடன் கொண்டு - அரசன் ஆறிலொன்றாகிய கடமையைக் கொள்ள, மிகுந்த எல்லாம் - எஞ்சிய
பொருளனைத்தையும், இல் ஏர் உழத்தி - மனைக்கிழத்தியாகிய தரும சீலை,
மடைச் செல்வம் இயற்றி ஏந்த - அடிசில் அமைத்து அளிக்க, அல் ஏறு
கண்டன் அடியாரை அருத்தும் நீரான் - இருள் நிறைந்த
திருமிடற்றினையுடைய இறைவன் அடியார்களை உண்பிக்குந் தன்மையை
யுடையான்.

     உழவின், இன் : சாரியை அல்வழிக்கண் வந்தது. வில்லேருழவன் -
வில்லாகிய ஏரால் மாற்றாரை வெல்லுதலாகிய உழவினைச் செய்வோன்;
அரசன். இல்லே ருழத்தி - இல்லிற் செய்யும் விருந்தோம்புதல் முதலியவற்றால்
அறப்பயன் விளைப்பவள்; மனையாள். எல்லாத் தொழில்களையும் உழவாக
உருவகித்துக் கூறுதல் வழக்கு. கொண்டு - கொள்ள. மடை - சோறு;
அதனைச் செல்வமெனச் சிறப்பித்துக் கூறினார். (4)

தொகைமாண்ட தொண்டர் சுவையாறு தழீஇய நான்கு
வகைமாண்ட மாறு படுமுண்டி மறுத்த ருந்த
நகைமாண்ட வன்பின் றலையாயவ னல்க நல்கப்
பகைமாண்ட செல்வ மணற்கேணியிற் பல்கு நாளின்.

     (இ - ள்.) தொகை மாண்ட தொண்டர் - அளவிறந்த அடியார்கள்,
அறுசுவை தழீஇய - அறுவகைச் சுவையும் பொருந்திய, நான்கு வகை
மாண்ட மாறுபடும் உண்டி - நான்கு வகையால் மாட்சிமைப்பட்ட (தம்முள்)
மறுதலையாய உணவுகளை, மறுத்து அருந்த - மறுத்து உண்ணும்படி, நகை
மாண்ட அன்பின் தலையாயவன் நல்க நல்க - மகிழ்ச்சி மிக்க
தலையன்பினையுடைய அடியார்க்கு நல்லான் கொடுக்குந்தோறும், பகை
மாண்ட செல்வம் - பகையில்லாத செல்வமானது, மணல் கேணியில் பல்கும்
நாளில் - மணற் கேணியில் (இறைக்குந் தோறும்) நீர் சுரத்தல் போல
இடையறாது பெருகு நாளில்.

     மாண் என்பது மிகுதிப் பொருள் தருதலை 'ஞாலத்தின் மாணப் பெரிது'
என்பதனால் அறிக. ஆறு சுவை - தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு,
உவர்ப்பு, துவர்ப்பு என்பன. நால்வகை உண்டி - உண்பன. தின்பன, நக்குவன,
பருகுவன என்பன. மாறுபடுதலாவது வெவ்வேறு வகையினதாதல்.
மறுத்தருந்தல் - போதுமென்று தடுத்துண்ணுதல்; மிகுதியாக இடுதலின்
மறுப்பரென்க;

"மறு சிகை நீக்கி யுண்டாரும்"

என்பது காண்க. இச் செல்வம் யாவர்க்கும் களிப்பை விளைத்தலின்
'பகைமாண்ட செல்வம்' என்றார். மாறுபடுவ தொன்றில்லாத செல்வம்
என்றுமாம். (5)

இந்நீர வாய வளங்குன்றினு மின்மை கூறாத்*
தன்னீர்மை குன்றா னெனுந்தன்மை பிறர்க்குத் தேற்ற
நன்னீர் வயலின் விளைவஃகி நலிவு செய்ய
மின்னீர வேணி மதுரேசர் விலக்கி னாரே.

     (பா - ம்.) * கூராத்.