பெருமித முனக்கேன் பிள்ளைப் பேறற்ற பாவி நீயென்
அருமைநன் மகனா லன்றோ விருமையு மடைவா யென்னப்
பெரிதுநா ணடைந்து மேலைக் காயினும் பிள்ளைப் பேறு
தருதவம் புரிவே னென்னாத் தனபதி தவமேற் செல்வான். |
(இ
- ள்.) பிள்ளைப் பேறு அற்ற பாவி உனக்குப் பெருமிதம் ஏன்
- மகப்பேறற்ற பாவியாகிய உனக்குப் பெருமிதம் எதற்கு, என் அருமை நன்
மகனால் அன்றோ - எனது அருமைப் புதல்வனாலல்லவா, நீ இருமையும்
அடைவாய் என்ன - நீ இம்மைப் பேற்றினையும் மறுமைப் பேற்றினையும்
அடைவாய் என்று கூற, பெரிதும் நாண் அடைந்து - மிகவும் வெட்கமுற்று,
மேலைக்கு ஆயினும் பிள்ளைப் பேறு தருதவம் புரிவேன் என்னா - மறு
பிறப்பிலாயினும் மகப் பேற்றினைத் தருதற்குரிய தவத்தினைச்
செய்வேனென்று, தனபதி தவமேல் செல்வான் - தனபதி தவம் புரிதற்
பொருட்டுச் செல்வானாயினன்.
பெருமிதம்
- செருக்கு. புதல்வற்பேறு மறுமைக்கும் காரணமாதலை,
"எழுபிறப்புந்
தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்" |
என்னும் பொய்யா மொழியால்
அறிக. மேலை - ஈண்டு மறுமை. (5)
தன்பெருஞ் செல்வ மெல்லா மருமகன் றனக்கே யாக்கி
அன்புகொண் மனைவி யோடு மருந்தவ நெறியிற் சென்றான்
பின்பவன் வரவு தாழ்ப்ப மருமகன் பெற்ற வெல்லாம்
வன்பினால் வழக்குப் பேசி வௌவினார் தாய மாக்கள். |
(இ
- ள்.) தன் பெருஞ் செல்வம் எல்லாம் - தனது பெரிய செல்வ
முழுதையும், மருமகன் தனக்கே ஆக்கி - மருகனுக்கே உரிமையாக்கி,
அன்பு கொள் மனைவியோடும் - அன்பு கொண்ட தன் மனைவியோடும்,
அருந்தவ நெறியில் சென்றான் - அரிய தவநெறியிற் சென்றனன்; பின்பு
அவன் வரவு தாழ்ப்ப - பின்பு அத் தனபதியின் வருகை காலந் தாழ்க்க,
மருமகன் பெற்ற எல்லாம் - அவன் மருகன் அடைந்த செல்வமனைத்தையும்,
வன்பினால் வழக்குப் பேசி - வலிமையினால் வழக்குரைத்து, தாய மாக்கள்
வௌவினார் - தாயத்தார் வௌவிக் கொண்டனர்.
வரவு
தாழ்ப்ப - நெடுநாள் வாராதிருந்தமையால். வன்பு - வலிமை;
வன்கண்மையுமாம். (6)
விளைநில னடிமை பைம்பூண் வெறுக்கைநன் பசுக்க ளேனை
வளனுமாற் றவர்கைக் கொள்ள வன்சிறை யிழந்த புட்போற்
றளர்வுறு மகனுந் தாயுஞ் சார்பிலாத் தம்ம னோர்க்கோர்*
களைகணா யிருக்குங் கூடற் கடவுளே சரண மென்னா. |
(பா
- ம்.) *சார்பிலார் தம்மனோர்க்கோர்.
|