II


32திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பிறையும் சுரந்தார் தமை நேர்ந்து சொல்வான் - கங்கையையும் மதியையும்
ஒளித்து வந்த சித்தசாமிகளைப் பார்த்துக் கூறுவான்.

     செல்வக் கன்னல் - செமுமையுள்ள கரும்பு. ஆரும் : யாரும் என்பதன்
மரூஉ. கையுறையாகக் கொண்டு வணங்க. கொடையாற் புகழும் கை யென்க.
(11)

வல்லாரில் வல்லே மெனவும்மை மதித்த நீரிக்
கல்லானைக் கிந்தக் கரும்பை யருத்தி னெல்லாம்
வல்லாரு நீரே மதுரைப்பெரு மானு நீரே
அல்லா லெவர்நும் மனம்வேட்ட தளிப்ப னென்றான்.

     (இ - ள்.) வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர் - வல்ல
வர்களுள் வல்லே மென்று உம்மை மதித்துக்கொண்ட நீர், இக்கல்லானைக்கு
இந்தக்கரும்பை அருத்தின் - இந்தக் கல்லானைக்கு இக் கரும்பினை
உண்பித்தால். எல்லாம் வல்லாரும் நீரே - எல்லாம் வல்ல சித்தரும் நீரே,
மதுரைப் பெருமானும் நீரே அல்லால் எவர் - மதுரை நாயகனும் நீரேயன்றி
வேறு யாவர், நும்மனம் வேட்டது அளிப்பன் என்றான் - பின்பு நுமது மனம்
விரும்பியதைக் கொடுப்பேன் என்று கூறினான்.

     வல்லாரெல்லாருள்ளும் யாம் வல்லேமென மதித்த வென்க; ஏழுனுருபு
கூட்டிப் பிரித்தற்பொருளில் வந்தது. (12)

என்னா முகிலைத் தளையிட்டவன் கூறக் கேட்டுத்
தென்னா வருதி யெனப்புன்னகை செய்து சித்தர்
நின்னால் வருவ தெமக்கேது நினக்கு நாமே
உன்னாசை தீரத் தருகின்ற தலாம லுண்டோ.

     (இ - ள்.) என்னா முகிலைத் தளை இட்டவன் கூற - என்று
மேகத்தைச் சிறையிட்ட பாண்டியன் சொல்ல, சித்தர் கேட்டு -
அம்மொழியைச் சித்தமூர்த்திகள் கேட்டு, தென்னா வருதி எனப் புன்னகை
செய்து - பாண்டியனே வருவாள் எனப் புன்னகை புரிந்து, எமக்கு உன்னால்
வருவது ஏது - எமக்கு உன்னால் வரும் பயன் யாது உளது, உன் ஆசை தீர
- உனது அவா அடங்க, நாமே நினக்குத் தருகின்றது அலாமல் உண்டோ -
நாமே உனக்குக் கொடுக்கின்ற தல்லாமல் வேறு உண்டோ?

     ‘நும் மனம் வேட்டது அளிப்பன்’ என மீட்டுங் கூறியதற்கு விடையாக
இங்ஙனம் கூறினார். தருகின்றது : தொழிற்பெயர். நின்பாற் பெறுவதொன்றுண்டோ என்க. (13)

செல்லா வுலகத் தினுஞ்சென்றொரு விஞ்சை கற்றோர்
பல்லாரு நன்கு மதிக்கப்பய னெய்து வார்கள்
எல்லா மறிந்த வெமக்கொன்றிலு மாசை யில்லை
கல்லானை கன்னல் கறிக்கின்றது காண்டி யென்றார்.