|
[-
வேறு]
|
கனவட்டத்
தடியிடறப் பொறிவிட்டுப் புலனவியக்
கரணத்துட் பொதியுயிர்விட் டவனாகந்
தனையொக்கற் பனவரெடுத் தனர்கிட்டிக் குரிசில்கடைத்
தலையிட்டத் திறமொழியத் தமிழ்மாறன்
இனைவுற்றுப் பனவர்கையிற் கனகக்குப் பைகணிறைவித்
தெமதிக்குற் றவனையெடுத் தெரிமாலை
புனைவித்தக் கடன்முடிவித் தனன்மற்றப் பழிபடரிற்
புதையப்பற் றியதிடையவிட் டகலாதே. |
(இ
- ள்.) கனவட்டத்து அடி இடற - கனவட்டம் என்னுங் குதிரையின்
காலிடறுதலால், பொறி விட்டுப் புலன் அவிய - பொறிகளை விடுத்துப்
புலன்கள் ஒழிய கரணத்துள் பொதி உயிர் விட்டவன் ஆகம் தனை -
கரணங்களுட் பொதிந்த உயிரை விட்டவனது உடலை, ஒக்கல் பனவர்
எடுத்தனர் கிட்டி - கிளைஞராகிய அந்தணர்கள் எடுத்துச் சென்று, குரிசில்
கடைத் தலையில் இட்டு அத்திறம் மொழிய - பாண்டியனது கடைவாயிலிற்
போட்டு அச்செய்தியைக் கூற, தமிழ் மாறன் - தமிழை வளர்க்கும்
பாண்டியனாகிய அவ்வரகுணன், இனைவுற்று - வருந்தி, பனவர் கையில்
கனகக் குப்பைகள் நிறைவித்து - அவ்வேதியர் கையில் பொற்குவைகளை
நிரப்பி, எமதிக்கு உற்றவனை எடுத்து எரிமாலை புனைவித்து - எமபுரஞ்
சென்றவன் உடலை எடுத்துத் தகனஞ்செய்வித்து, அக்கடன் முடிவித்தனன் -
அந்த ஈமக்கடன்களை முற்றுவித்தான்; அப்பழி . அக்கொலைப் பாவமானது,
படரில் புதைய - அவன் துன்பத்தில் அழுந்துமாறு, இடைவிட்டு அகலாது
பற்றியது - சிறிதும் நீங்காது தொடர்ந்தது.
கனவட்டம்
- பாண்டியன் குதிரையின் பெயர், புலன் - பொறியுணர்வு.
பொறிவிட்டு என்பதற்குப் பொறிகள் நிலை கெட்டு என்றுரைத்தலுமாம்.
அரசன் அமைச்சர் வாயிலாகத் தொழில் நடாத்துதல் போல ஆமாவானது
கரணங்களினுள்ளே பொருந்தி அவற்றின் வாயிலாகத் தனது தொழிலை
நடாத்துதலின் 'கரணத்துட் பொதியுயிர்' என்றார். எடுத்தனர் : முற்றெச்சம்.
எரிமாலை புனைவித்து - அக்கினிச் சுவாலையாகிய மாலை புனைவித்து;
தீச்சுடர் மெய்ம் முழுதும் போர்க்கும்படி தகனஞ் செய்வித்து என்றவாறு.
மாலை என்பதற்கு முறைப்படி என்றுரைப்பாருமுளர் : மற்று, அசை. (6)
|
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
பற்றிய பழிக்குத்
தீர்வு பழமறைக் கிழவர் சொன்ன
பெற்றியி னைவே றுண்டி நதிக்கரைப் பெருநூற் கேள்வி
முற்றிய மறையோர்க் கீந்து மூவராந் தாரு வேந்தைச்
சுற்றியுந தூர்வை கொய்து சுரபிகள் சுவைக்க வீந்தும். |
|