II


352திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) அலம்பு பால் கடல் போல் - ஒலிக்கின்ற பாற்கடல் போல,
புறத்து அமுத நீர் அகழும் - புறத்தின்கண் அமுதம் போன்ற நீரினையுடைய
அகழியும், பொலம் செய்ஞாயில் சூழ் புரிசையும் - பொன்னாற் செய்த
சூட்டுக்கள் சூழ்ந்த மதிலும், பொன்செய் கோபுரமும் - பொன்னாற் செய்த
கோபுரமும், நலம் கொள்பூ இயல் வீதியும் - நன்மையைக் கொண்ட பொலி
வமைந்த வீதிகளும், நவமணி குயின்ற - ஒன்பது மணிகளும் பதிக்கப்பட்ட,
துலங்கு மாளிகைப் பந்தியும் - விளங்கா நின்ற மாளிகை வரிசைகளும்,
சூளிகை நிரையும் - அவற்றின் இறப்பு வரிசைகளும்.

     ஞாயில் - மதிலுறுப்பு; ஏப்புழைக்கு நடுவாக எய்து மறையும் சூட்டு
என்பர். சூளிகை - நிலா முற்றமுமாம். (26)

ஐம்பு லங்களும் வைகலும் விருந்ததா வருந்த*
வெம்பு நால்வகை யுண்டியும் வீணையுஞ் சாந்துஞ்
செம்பொ னாரமு மாடலின் செல்வமுந் தெய்வப்
பைம்பொன் மேகலை யோவியப் பாவையொப் பாரும்.

     (இ - ள்.) ஐம்புலங்களும் - ஐந்து புலன்களும், வைகலும் - நாள்
தோறும், விருந்ததா அருந்த - விருந்தாக உண்ணுதற்கு அமைந்த, வெம்பு
நால்வகை உண்டியும் - வெம்மையுள்ள நான்கு வகையாகிய உணவுகளும்,
வீணையும் - யாழும், சாந்தும் - சந்தனமும், செம்பொன் ஆரமும் - சிவந்த
பொன்னாற் செய்த மாலைகளும், ஆடலின் செல்வமும் - ஆடலாகிய
செல்வமும், தெய்வப் பைம்பொன் மேகலை - தெய்வத் தன்மை பொருந்திய
பசிய பொன்னாலாகிய மேகலையணிந்த, ஓவியப் பாவை ஒப்பாரும் -
சித்திரப் பாவையை மகளிரும்.

     ஐம் புலங்கள் - ஐம் பொறிகள். விருந்தது, அது : பகுதிப் பொருள்
விகுதி. ஆக என்பது தொக்கது. வெம்பு - விருப்பஞ் செய்கின்ற என்றுமாம்.
உண்டி நாவிற்கும், வீணை செவிக்கும், சாந்து மூக்கிற்கும் மெய்க்கும்,
ஆரமும் ஆடலும் கண்ணிற்கும் விருந்தாக அமைந்தன. பாவையொப்பார்
ஐம்பொறிகட்கும் விருந்தாக அமைந்தனர் என்க;

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள"

என்பது முப்பால். (37)

படர்ந்த வார்சடை யுருத்திரர் பணைத்திறு மாந்த
வடங்கொள் பூண்முலை யுருத்திர மகளிரோ டமரும்
இடங்கொண் மாளிகைப் பந்தியு மிகல்விளை துன்பங்
கடந்த செல்வமுங் கவலையில் போகமுங் காட்டி.

     (இ - ள்.) படர்ந்த வார்சடை உருத்திரர் - விரிந்த நீண்ட
சடையையுடைய உருத்திரர்கள், பணைத்து இறுமாந்த - பருத்து
இறுமாந்த,


     (ப - ம்.) * விருந்தவா வருந்த.