|
நாயனார் என்க. புத்திர
மார்க்கமாகிய கிரியை நெறியினின்று சாமீப
முற்றோர் இதிற் கூறப்பட்டனர். கிரியையின் இயல்பையும் பேற்றையும்,
'புத்திரமார்க்
கம்புகலின் புதியவிரைப் போது
புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து
சுத்திசெய்தா சனமூர்த்தி மூர்த்தி மானாஞ்
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
பத்தியினா லர்ச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினொடு மெரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலுமிக் கிரியையினை யியற்று வோர்கள்
நிமலன்ற னருகிருப்பர் நினையுங் காலே" |
என்னும் சிவஞானசித்தித்
திருவிருத்தத்தால் அறிக. (41)
கிளர்ந்த
காலினா லங்கியை நிமிர்த்துமேற் கிடைத்து
வளர்ந்த பிங்கலை யிடைநது வழியுகு மதியின்
விளைந்த வின்னமு துண்டுநம் விடையவன் வடிவங்
குளந்த னிற்குறித் தவனுருக் கொண்டவ ரிவர்காண். |
(இ
- ள்.) கிளர்ந்த காலினால் - மேலெழுந்த பிராண வாயுவால்,
அங்கியை நிமிர்த்து - (மூலாதாரத்திலுள்ள) நெருப்பினை மேலே எழுப்பி,
மேற் கிடைத்து - மேற் சென்று, வளர்ந்த பிங்கலை இடை நடுவழி உகும் -
வளர்ந்த பிங்கலைக்கும் இடைக்கும் நடுவிலுள்ள சுழுமுனையின் வழியாகச்
சொரிகின்ற, மதியின் விளைந்த இன் அமுது உண்டு - சந்திர மண்டிலத்தில்
விளைந்த இனிய அமுதினை அருந்தி, நம் விடையவன் வடிவம் குளந்தனில்
குறித்து - நம் இறைவனது திருவுருவத்தினைப் புருவ மத்தியில் தியானித்து,
அவன் உருக்கொண்டவர் இவர்காண் - அவன் வடிவத்தை அடைந்தவர்
இவர்.
அங்கி
- உடல் நடுவில் அக்கினி மண்டலத்தில் உள்ள மூலாக்கினி.
பிராண வாயுவாலும் வன்னி பீசமந்திரத்தாலும் மூலக்கனலை மேலெழுப்பி
என்க. மேல் - பிரமரந்திரம், பிங்கலை - வலது நாடி. இடை - இடது நாடி.
நடு - சுழிமுனை நாடி. சுழி முனை வழியாக மேற் சென்று என்றுமாம். குளம்
-நெற்றி; புருவ நடு. இவற்றின் இயல்புகளை யோக நூல்களில் விரிவாகக்
காண்க. சகமார்க்கமாகிய யோக நெறியினின்று சாரூபமுற்றோர் இதிற்
கூறப்பட்டனர். யோகத்தின் இயல்பையும் பேற்றையும்,
"சகமார்க்கம்
புலனொடுக்கித் தடுத்துவளி யிரண்டுஞ்
சலிப்பற்று முச்சதுர மூலாதா ரங்கள்
அகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங்
கணைந்துபோய் மேலேறி யலர்மதிமண் டலத்தின்
|
|