II


356திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



முக மார்கக வமுதுடல முட்டத் தேக்கி
     முழுச்சோதி நினைந்திருத்தன் முதலாக வினைகள்
உகமார்க்க வட்டாங்க யோக முற்றும்
     உழத்தலுழந் தவர்சிவன்ற னுருவத்தைப் பெறுவர்"

என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் அறிக. (42)

முக்க ணாயகன் பொருட்டென வேள்விகள் முடித்துத்
தொக்க வேதிய ரிவர்புனற் சாலையித் தொடக்கத்
தக்க பேரறம் புகழ்பயன் றமைநன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையாற் புரிந்தவ ரிவர்காண்.

     (இ - ள்.) முக்கண் நாயகன் பொருட்டு என - மூன்று கண்களை
யுடைய இறைவன் பொருட்டாக, வேள்விகள் முடித்துத் தொக்க வேதியர்
இவர் - வேள்விகளைச் செய்து சிவபதம் அடைந்த அந்தணர்களிவராவர்;
புனற்சாலை இத்தொடக்கம் தக்கபேர் அறம் - நீர்ச் சாலை வைத்தலாகிய
இது முதலான தகுந்த பெரிய அறங்களை, புகழ் பயன் தமை நன்கு
மதிக்கும் பொக்கம் மாறிய நிராசையால் - புகழையும் பயனையும் நன்கு
கருதிச் செய்யும் பொய் நீங்கிய நிராசையுடன், புரிந்தவர் இவர்காண் -
செய்தவர் இவர்.

     புனற்சாலை - தண்ணீர்ப்பந்தர். புகழ் பயன் கருதிச் செய்யும் அறம்
உண்மை யறம் அன்றென்பார் 'புகழ்பயன்றமை நன்கு மதிக்கும் பொக்க
மாறிய' என்றார். மேல் மூன்று செய்யுளிலும், சிவாகமங் கூறும் நான்கு
நெறிகளுள் முன் மூன்று நெறியினின்றும் பதமுத்திகள் எய்தினோர்களைக்
கூறி, இச்செய்யுள் முதலியவற்றாற் பிறவாறு சிவனுல கடைந்தவர்களைக்
கூறுகின்றார். மறைநூல் கூறும் வேள்விகளைச் சிவன் பொருட்டுச் செய்த
அந்தணர்களும், அறநூல் கூறும் பொது வறங்களைப் பயன் கருதாது
செய்தவர்களும் சிவனுலகில் வாழ்தல் இதிற் கூறப்பட்டது. (43)

மறையி னாற்றினாற் றந்திர மரபினான் மெய்யில்
நிறையு நீற்றினர் நிராமய னிருத்தனைந் தெழுத்தும்
அறையு நாவினர் பத்தரா யரன்புகழ் கேட்கும்
முறையி னாலிவர் வினைவலி முருக்கினார் கண்டாய்.

     (இ - ள்.) மறையின் ஆற்றினால் - வேத நெறியினாலும், தந்திர
மரபினால் - ஆனம நெறியினாலும், மெய்யில் நிறையும் நீற்றினர் - உடலில்
நிறைந்த திருநீற்றினையுடையவரும், நிராமயன் நிருத்தன் ஐந்து எழுத்தும்
அறையும் நாவினர் - நோயற்றவனாகிய கூத்தப்பிரானது
திருவைந்தெழுத்தையும் உச்சரிக்கின்ற நாவினையுடையாருமாய், பத்தராய்
அரன் புகழ் கேட்கும் முறையினால் - அன்பராகி இறைவன் புகழைக்
கேட்கின்ற முறைமையினால், வினைவலி முருக்கினார் இவர் - வினையின்
வன்மையைக் கெடுத்தவர் இவர்.