II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்357



வேத நெறியிலும் சிவாகமத்துறையில் நின்று சிவபிரானை வழிபட்டுப்
பேறெய்தினோர் இதிற் கூறப்பட்டனர். (44)

மறைக ளின்சத வுருத்திர மந்திர நவின்றோர்
நிறைகொள் கண்டிகை நீறணி நீரரியா ரேனுங்
குறிகு ணங்குலன் குறித்திடா தன்பரைச் சிவனென்
றறியு மன்பினாற் பிறவிவே ரறுத்தவ ரிவர்காண்.

     (இ - ள்.) மறைகளின் சத உருத்திர மந்திரம் நவின்றோர் -
வேதங்களிலுள்ள சதவுருத்திர மந்திரத்தைக் கூறினோரும், நிறை கொள்
கண்டிகை நீறு அணி நீரர் - நிறைந்த உருத்திராக்க மாலையும் திருநீறும்
அணிந்த தன்மையையுடையாரும், யாரேனும் - யாவராயினும், குறிகுணம்
குலன் குறித்திடாது - அவர் பெயரையுங் குணத்தையுங் குலத்தையுங்
கருதாது, அன்பரைச் சிவன் என்று அறியும் அன்பினால் - அடியார்களைச்
சிவபிரானே என்று அறிகின்ற அன்பினாலே, பிறவிவேர் அறுத்தவர் இவர்
காண் - பிறவியின் மூலத்தை அறுத்தவர் இவர்.

     வேத புருடனுக்கு உருத்திரம் கண்ணும், அதனுள்ளிருக்கும்
திருவைந்தெழுத்துக் கண்மணியுமாம் என்று பெரியோர் கூறுவர்.
கண்டிகையும் நீறு மணிந்தார் எவராயினும் அவரை இன்னவாறு வழிபட
வேண்டுமென்பதனை,

"எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
     திருநீறுஞ் சாதனமு கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதங்
     குகந்தடிமைத் திறம்பேணி யுவந்து போற்றி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி
     யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே
     கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே"

என்னும் தேவாரத்தால் அறிக. (45)

ஆனஞ் சாடிய பரஞ்சுட ரிறைசிவ ஞான
தானஞ் செய்தவர் தருப்பணஞ் செய்தவர் சாம
கானஞ் செய்தவற் காலயங் கண்டுதா பித்தோர்
ஊனஞ் சேர்பிறப் பறுத்துவா ழுத்தம ரிவர்காண்.

     (இ - ள்.) ஆன் அஞ்சு ஆடிய பரஞ்சுடர் இறை - பஞ்ச
கவ்வியமாடிய பரஞ்சோதியாகிய இறைவனுடைய, சிவஞான தானம் செய்தவர்
-சிவஞானத்தைத் தானஞ் செய்தவரும், தருப்பணம் செய்தவர் - தருப்பணஞ்
செய்தவரும், சாமகானம் செய்வதற்கு - சாமகானம் பாடும்