II


விறகுவிற்ற படலம்371



நாதனோடும், பாடுதி கொல்லோ என்ன - நீ பாடவல்லையோ என்று வினவ,
மழலை யாழ் இடந்தோள் இட்ட பாணர் கோன் வணங்கிச் சொல்வான் -
இனிய யாழை இடது தோளிலிட்ட பாணர் தலைவன் வணங்கிக் கூறுவான்.

     உழையர் அழைத்து வந்துவிட அங்ஙனம் விடுக்கப்பட்ட பத்திரன் என
விரித்துக் கொள்க. உவரி - உவர்ப்புடையது; கடல். இ : வினை முதற்
பொருள் விகுதி. முன்னோன் செயல் இவன் மீது ஏற்றிக் கூறப்பட்டது. பாணி
- பாட்டு; தாளமுமாம். அடிப்பட்ட பயிற்சியுடையன் எனற்கு 'பாணி பழகிசை
வல்லான்' என்றனன். கொல் : அசை. இடந்தோள்; மெலித்தல். (6)

தென்னவர் பெரும யானுன் றிருவுள வலனுங் கூடன்
முன்னவ னருளுங் கூட்டு முயற்சியான் முயன்று பாடி
அன்னவன் விருது வாங்கி யவனைவீ றழிப்ப னென்றான்
மன்னவ னாளைப்பாடு போகென வரைந்து சொன்னான்.

     (இ - ள்.) தென்னவர் பெரும - பாண்டியர் பெருமானே, யான் -
அடியேன், உன் திரு உள வலனும் - உனது திருவுள்ளத்தின் வலிமையும்,
கூடல் முன்னவன் அருளும் - கூடலில் வீற்றிருக்கும் முதல்வனாகிய சோம
சுந்தரக் கடவுளின் திருவருளும், கூட்டும் முயற்சியால் முயன்று பாடி -
கூட்டுகின்ற முயற்சியின் நெறியே சென்று பாடி, அன்னவன் விருது வாங்கி -
அந்த ஏமநாதன் விருதினை வாங்கி, அவனை வீறு அழிப்பன் என்றான் -
அவன் தருக்கினையும் ஒழிப்பேன் என்று கூறினான்; மன்னவன் - வேந்தன்,
நாளை பாடு போக என வரைந்து சொன்னான் - நாளை வந்து பாடுவாய்
இன்று போகக் கடவை என்று வரையறுத்திச் சொன்னான்.

     நின் திருவுள்ளத்தின் அன்பும் இறைவன் அருளும் அவனை
வெல்லுதற்கேற்ற முயற்சித் திறனை எனக்களிப்பது ஒரு தலையாகலின்
யானும் அவ்வாறு முயன்று பாடி வெல்லோன் என்றானென்க. தோற்றவன்
விருதினையிழக்க வேண்டுமாகலின் 'விருது வாங்கி' என்றார். போகென,
அகரந் தொகுத்தல். வரைந்து - காலம் வரையறுத்து. (7)

இற்கண்ணே யிசைவல் லான்போ யிருந்துழி யனையான்                                     பாங்கர்க்
கற்கும்பாண் மக்கண் மல்ல லாவணங் கவலை மன்றம்
பொற்குன்ற மனைய மாட மருகெங்கும் போகிப் போகிச்
சொற்குன்றா வகையாற் பாடித் திரிந்தனர் வீறு தோன்ற.

     (இ - ள்.) இசை வல்லான் இல் கண் போய் இருந்துழி - இசையில்
வல்ல பாணபத்திரன் தனது வீட்டின்கண் சென்று இருந்தபொழுது,
அனையான் பாங்கர் பாண் கற்கும் மக்கள் - அவ்வேமநாதனிடம் இசை
கற்கின்ற மாணவர்கள், மல்லல் ஆவணம் கவலை மன்றம் - வளமிக்க கடை
வீதியும் கவர் வழியும் மன்றங்களும், பொன்குன்றம் அனைய மாடம் மறுகு -
பொன்மலையை ஒத்த மாடங்களையுடைய வீதிகளும், எங்கும் - ஆகிய