|
எவ்விடத்தும், போகிப்
போகி - சென்று சென்று சொல்குன்றா வகையால்
பாடி - இசை நூலிற்குரியய சொற்கள் மாத்திரை குறையா வகை பாடி, வீறு
தோன்றத் திரிந்தனர் - தமது இசை வன்மை புலப்பட உலாவினர்.
பாண்
கற்கும் மக்கள் என்க. மக்கள் மாணவர்; பாண் மக்கள்
என்றுமாம். கவலை - கவர் வழி; இரண்டு தெருக்கூடுமிடம். மன்றம் -
பலர் கூடும் இடம். தங்கள் ஆசிரியனுடைய பெருமை தோன்ற என்றுமாம். (8)
இவ்விசை கேட்டு நன்றென் றதிசயித் திசைவல் லான்பால்
வவ்விசை மைந்தா பாடும் வண்ணமீ தென்னை கெட்டேன்
அவ்விசை வல்லான் பாடு முறையெற்றோ வவனை நாளைச்
செவ்விசை* பாடி வெல்வ தெவனெனத் திவவுக் கோலான். |
(இ
- ள்.) திவவுக்கோலான் - நரம்பின் கட்டமைந்த வீணையில் வல்ல
பாணபத்திரன், இவ்விசை கேட்டு - இந்த இசையினைக் கேட்டு, நன்று என்று
அதிசயித்து - நல்லது என்று வியந்து, இசை வல்லான்பால் இசை வவ்வு -
ஏமநாதனிடம் இசை கற்கின்ற, மைந்தர் பாடும் வண்ணம் ஈது - மாணவகர்
இசை பாடுந் தன்மை இது; என்னை - இவர்கள் இசை
வன்மையிருந்தாவாறென்னை, கெட்டேன் - ஆ கெட்டேன், அவ்விசை
வல்லான் பாடும் முறை எற்றோ - அந்த ஏமநாதன் பாடும் முறைமை
எத்தன்மைத்தோ, நாளை செவ்விசை பாடி அவனை வெல்வது எவன் என -
நாளைச் செவ்விய இசை பாடி அவனை வெல்வது எங்ஙனமென்று கருதி.
வவ்வுதல்
- பற்றுதல்; கற்றுக் கொள்ளல். கெட்டேன், வியப்பிடைச்
சொல். இவர் பாடுவது இவ்வாறாயின் அவன் பாடுவது எத்தன் மைத்தோ அவனை வெல்வதெங்ஙனமெனக்
கவலை கொண்டனனென்க. தெவ்விசை
பாடி என்னும் பாடத்திற்குப் பகையாக இசை பாடி என்றும், யாவரும் ஏற்றுக்
கொள்ளும் இசை பாடி என்றும் பொருள் கொள்ளலாகும். (9)
என்பது தொல்காப்பியம்.
மையணி மிடற்றி னானை மதுரைநா யகனை வந்தித்
தையனே யடியேற் கின்று னருட்டுணை செய்யல் வேண்டும்
மெய்யனே யென்று போற்றி வேண்டுகொண் டன்புதோய்ந்த
பொய்யறு மனத்தா னில்லம் புக்கினி திருந்தா னிப்பால். |
(இ
- ள்.) மை அணி மிடற்றினானை மதுரைநாயகனை வந்தித்து -
கரிய அழகிய திருமிடற்றினையுடையனாகிய சோம சுந்தரக் கடவுளை
வணங்கி,ஐயனே - அப்பனே, அடியேற்கு - அடியேனுக்கு - இன்று உன்
அருள் துணை செய்யல்
வேண்டும் - இப்பொழுது நினது திருவருளாகிய
(பா
- ம்.) * தெவ்விசை.
|