II


விறகுவிற்ற படலம்373



துணையை அளித்தல் வேண்டும்; மெய்யனே என்று - உண்மை வடிவனே
என்று, போற்றி வேண்டு கொண்டு - வணங்கி வேண்டிக் கொண்டு. அன்பு
தோய்ந்த பொய் அறு மனத்தான் - அன்பில் மூழ்கிய பொய்யற்ற
உள்ளத்தையுடைய பாணபத்திரன், இல்லம் புக்கு இனிது இருந்தான் -
மனையை அடைந்து கலலையின்றி இருந்தனன்; இப்பால் - பின்.

     கருமையை அணிந்த மிடறு என்றுமாம். ஒரு பொருண்மேற் பல பெயர்
வந்தன. அருட்டுணை - அருளாகிய துணை. வேண்டு - வேண்டுதல்;
முதனிலைத் தொழிற்பெயர். (10)

[கலிநிலைத்துறை]
வருத்த னாகிவந் திரந்தவ னிசைப்பகை மாற்ற
விருத்த னாம்விற காளென விண்ணிழி விமானத்
தொருத்த னாரறி வாகிய வுண்மையா னந்தத்
திருத்த னார்தம திச்சையாற் றிருவுருக் கொள்வார்.

     (இ - ள்.) வருத்தனாகி வந்து இரந்தவன் - துன்பமுடையவனாகி வந்து
குறையிரந்த பாணபத்திரனது, இசைப் பகை மாற்ற - இசையில் வல்ல
பகைவனை ஓட்ட, விருத்தனாம் விறகு ஆள் என - மூப்புடையனாகிய
விறகாளைப் போல, விண் இழிவிமானத்து ஒருத்தனார் - வானினின்றும்
இறங்கிய இந்திர விமானத்தில் எழுந்தருளிய ஒப்பற்றவரும், உண்மை அறிவு
ஆனந்தம் ஆகிய திருத்தனார் - சச்சிதானந்த வடிவமுடையவருமாகிய சோம
சுந்தரக் கடவுள், தமது இச்சையால் திரு உருக்கொள்வார் - தமது
இச்சையானே திருமேனி கொள்வாராயினர்.

     இசைப் பகை - இசைவல்ல பகைவன். உண்மையறிவானந்தமாகிய என
மாறுக. திருத்தன் - தீர்த்தன். இறைவன் கொள்ளும் திருமேனிக்குக் காரணம்
அவனது இச்சையே எனல் போந்தது. (11)

அழுக்கு மூழ்கிய சிதரசைத் தவிர்சடை யமுதம்
ஒழுக்கு வெண்மதி* வாங்கியே செருகிய தொப்ப
மழுக்கு கூனல்வெள் வாய்க்குயம் வலம்படச் செருகி
இழுக்கு தேய்செருப் பருமறை கடந்ததா ளேற்றி.

     (இ - ள்.) அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து - அழுக்கு நிறைந்த
கந்தையை உடுத்தி, அவிர்சடை அமுதம் ஒழுக்கு - விளங்கிய சடையிலிருந்து
அமிழ்தினைப் பொழிகின்ற, வெண்மதி வாங்கியே செருகியது ஒப்ப -
வெள்ளிய சந்திரனையே வாங்கி இடையிற் செருகியது போல, கூனல் -
வளைந்த, மழுக்கு வெள்வாய்க் குயம் - மழுங்கிய வெள்ளிய வாயையுடைய
அரிவாளை, வலம்படச் செருகி - வலப்புறத்து இடையிற் செருகி, இழுக்கு
தேய் செருப்பு - இழுத்துத் தேய்ந்த செருப்பின்கண். அரூமறை கடந்த தாள்
ஏற்றி - அரிய வேத முடியைக் கடந்த திருவடிகளை ஏற்றி.


     (பா - ம்.) * வான்மதி.