|
(இ
- ள்.) நடந்து - அங்ஙனஞ் சென்று; கொள்ளுநர்க்கு அறாவிலை
பகர்ந்து - வாங்குபவர்க்கு மிக்க விலை சொல்லி, நால் மாடம்மிடைந்த
வீதியும் - பல மாடங்கள் நெருங்கிய வீதிகளையும், கவலையும் - இரண்டு
தெருக்கள் கூடுமிடங்களையும், முடுக்கரும் - குறுந் தெருக்களையும்,
மிடைந்து தொடர்ந்த வேதமும் - நெருங்கிப் பின் பற்றிய மறையையும்,
பிரமன் மால் சூழ்ச்சியும் - பிரமனும் திருமாலுமாகிய இவர்கள் சூழ்ச்சியையும்,
பகலும் - பகற்பொழுதையும், கடந்து போகி - கடந்து சென்று,
அவ்விசைவலான் கடைத்தலைச் செல்வார் - அந்த இசையில் வல்ல ஏமநாதன் கடைவாயிலின்கண்
செல்வாராயினர்.
அறாவிலை
- விலைப்படலாகாத விலை; மிக்க விலை. நான்கு மாடம்
கூடிய என்றுமாம். முடுக்கர் - குறுந்தெரு; இக்காலத்தில் இது சந்து என
வழங்கும். பகல் முழுதும் வீதி முதலியவற்றில் நடந்து அவ்றறைக் கடந்து
பகல் கழிந்த பின் இசைவலான் கடைத்தலைச் செல்வாராயினர்; அங்ஙனஞ்
செல்லுதற் பொருட்டே அறாவிலை பகர்ந்தனரென்க. வேதமும் பிரமன் மால்
சூழ்ச்சியும் இறைவன் இங்ஙனம் எழுந்தருளுதலை அறியும் வலியிலவாயின
வென்பார் அவற்றைக் கடந்து என்றார். (17)
வரவு நேர்ந்தழைப்
பவரென வாம்பல்வாய் மலர
இரவு கான்றுவெண் மதிநகைத் தெழவுயிர்த் துனைவர்
பிரிவு நோக்கினா ரெனக்கணீர் பில்குதா மரையின்
நிரைகள் கூம்பிடக் கதிரவன் குடகட*னீந்த. |
(இ
- ள்.) உயிர்த் துணைவர் வரவு நேர்ந்து அழைப்பவர் என -
உயிர் போன்ற தலைவரது வருகையை நோக்கி அழைப்பவர் போல, ஆம்பல்
வாய் மலர - ஆம்பல்கள் வாய மலர, இரவு கான்று - இரவினைத்
தோற்றுவித்து, வெண்மதி - வெள்ளிய சந்திரன், நகைத்து எழ - புன்முறுவல்
செய்து தோன்றவும், (உயிர்த் துணைவர்) பிரிவு நோக்கினர் என - கணவரது
பிரிவினைக் கண்ட மகளிர் கண்ணீர் உகுத்து முகம் வாடுதல் போல, கள் நீர்
பில்கு தாமரையின் நிரைகள் கூம்பிட, தேனாகிய நீர் பெருகுந் தாமரையின்
வரிசைகள் குவிய, கதிரவன் குடகடல் நீந்த - சூரியன் மேலைக் கடலில்
நீந்திச் செல்லவும்.
உயிர்த்
துணைவர் என்பதனை முன்னுங் கூட்டியுரைக்க. மாலைப்
பொழுதில் கூடினார்க்கு இன்பமும் பிரிந்தார்க்குத் துன்பமும் உளவாதலும்
குறிப்பிட்டவாறாயிற்று. கண்ணீர் - கள்ளாகிய நீர் எனவும், விழி நீர் எனவும்
இரட்டுற மொழிதல். (18)
பறவை வாயடைத்
தருகணை பார்ப்பொடும் பெடையைச்
சிறிக ராலணைத் திருபொழிற் குடம்பையுட் செறிய
நறவ வாய்ப்பெடை யுண்டதே னக்கிவண் டோடைப்
பொறைகொ டாமரைப் பள்ளியுட் புகுந்துகண் படுக்க. |
(பா
- ம்.) * குரைகட னீந்த.
|