எழுதுசித் திரம்போன் மன்னி யிழுமெனு மருவி யோதை
முழவொலி கஞ்ச நாதம் வலம்புரி முரலு மோசை
கொழுதிசை வண்டின் றாரி யெனவிசைக் குணனும் வேரல்
விழுமிலை சிரன்மீன் மேல்வீழ் வீழ்ச்சிபோற் பாடற் பண்பும். |
(இ
- ள்.) எழுத சித்திரம் போல் மன்னி - எழுதிய ஓவியம் போல
அசைவற விருந்து, இழுமெனும் அருவி - ஓதை இழுமென்றொலிக்கும்
அருவியின் ஓசையும், முழவு ஒலி - முழவின் ஓசையும், கஞ்சநாதம் - கஞ்சக்
கருவியின் ஒலியும், வலம்புரி முரலும் ஓசை - வலம்புரிச் சங்கு முழங்கும்
ஓசையும், கொழுது இசை வண்டின் தாரி என - மலர்களைக் கிண்டி
ஒலிக்கும் வண்டின் ஒலியும் என்று சொல்லப்பட்ட, இசைக் குணனும் -
மிடற்றோசையின் குணமும், வேரல் விழும் இலை - மூங்கிலினின்று வீழா
நின்ற இலையின் வீழ்ச்சியும், சிரல் - மீன்குத்திப் பறவையானது, மீன் மேல்
வீழ் வீழ்ச்சி போல் - மீனின் மேல் வீழ்கின்ற வீழ்ச்சியும் போல, பாடல்
பண்பும் - பாடற் குணமும்.
மூங்கில்
இலையின் வீழ்ச்சி மேலிருந்து மெத்தெனக் கீழிறங்குதற்கும்,
சிரல் வீழ்ச்சி மேலே அசைந்து நின்று விரைந்து கீழிறங்கிச் செல்லுதலுக்கும்
உவமம். இசைக் குணம் பாடற் குணங்களை,
"துய்யமொழி
மென்குயிலுஞ் சோலைவரி வண்டினமும்
வைய முழங்கும் வலம்புரியும் - கைவைத்துத்
தும்புருவு நாரதரும் பாடியமூ வோசையென
நம்புநீர் நால்வேதத் துள்" |
| |
"சிச்சிலி
பூனை குடமுழக்கஞ் செம்மைத்தாம்
சிரல்வா னிலையுங் கழையிலை வீழ்வதும்
அருவி யோசையு முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும்
இன்னுமென் றிசைப்பப் பன்னிய விதியொடு" |
என்னும் கல்லாடத்தாலும்
அறிக. (31)
பொருந்தமந்
தரத்தினோடு மத்திமந் தாரம் போக்கித்
திருந்திய துள்ள றூங்கன் மெலிவது சிறப்பச் செய்து
மருந்தன செய்யு ளோசை யிசையோசை வழாமல் யார்க்கும்
விருந்தெனச் செவியின் மாந்தப் பாடினார் வேத கீதர். |
|