II


விறகுவிற்ற படலம்385



     (இ - ள்.) பொருந்த - இசைய, மந்தரத்தினோடு மத்திமம் தாரம்
போக்கி படுத்தல் நலிதல் எடுத்தல் என்பவற்றில் இசையை நடாத்தி, திருந்திய
துள்ளல் தூங்கல் மெலிவது சிறப்பச் செய்து - திருத்தமாகிய துள்ளலும்
தூங்கலும் மெலிவதுமாகிய இவற்றைச் சிறக்கச் செய்து, மருந்து அன செய்யுள்
ஓசை இசை ஓசை வழாமல் - அமுதத்தை ஒத்த பாடலோசையும்
இசையோசையும் வழுவுதலில்லாமல், யார்க்கும் விருந்து என - யாவர்க்கும்
விருந்தென்னும்படி, செவியின் மாந்த - அவர்கள் காதினாற் பருக, வேத கீதர்
பாடினார் - சாமகானராகிய இறைவர் பாடியருளினார்.

     இசைக் குணனும் பாடற் பண்பும் பொருந்த என மேற்செய்யுளோடு
இயைக்க. மந்தரம் - கீழ் இசை; படுத்தல். மத்திமம் - சமனிசை; நலிதல்.
தாரம் - உச்சவிசை; எடுத்தல், இவற்றை,

"மந்தரத்து மத்திமத்துந் தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகண் மெலிவித்துஞ் சயங்கொண்டும் வலிவித்தும்"

என்னும் திருத்தொண்டர்புராணச் செய்யுளால் அறிக. (32)

[கொச்சகக்கலிப்பா]
விரைசார் மலரோ னறியா விகிர்தன்
அரசாய் மதுரை யமர்ந்தா னென்னே
அரசாய் மதுரை யமர்ந்தா னவனென்
புரைசார் மனனும் புகுந்தா னென்னே.

     (இ - ள்.) விரைசார் மலரோன் அறியா விகிர்தன் - மணம்
பொருந்திய தாமரை மலரில் இருக்கும் பிரமனால் அறியப்படாத பெருமான்,
அரசாய் மதுரை அமர்ந்தான் என்னே - பாண்டி மன்னனாக மதுரையின்கண்
வீற்றிருந்தான் இது என்னே; அரசாய் மதுரை அமர்ந்தான் அவன் -
அங்ஙனம்அரசனாய் மதுரையிலமர்ந்த அவ்விறைவனே, என் புரைசார்
மனனும் புகுந்தான் என்னே - எனது குற்றம் பொருந்திய உள்ளத்தின்
கண்ணும் குடிப்புகுந்தான் இது என்னே.

     இது முதல் மூன்றும் அவர் பாடியய இசைப் பாட்டுக்கள். தலையி
கூற்றாகவுள்ளன. விகிர்தன் - வேறுபட்ட தன்மையன். (33)

பாடன் மறையுந் தெளியாப் பரமன்
கூடல் கோயில் கொண்டா னென்னே
கூடல் போலக் கொடியே னககும்
ஆட லரங்கா வமர்ந்தா னென்னே.

     (இ - ள்.) பாடல் மறையும் தெளியாப் பரமன் - துதித்தலையுடைய
வேதமும் தெளிந்துணராத இறைவன், கூடல் கோயில் கொண்டான் என்னே -
கூடலின்கண் திருக்கோயில்கொண்டெழுந்தருளினன் இது என்னே,
கூடல்போல - அக்கூடலில் எழுந்தருளியது போல, கொடியோன் அகமும் -
கொடியேனது உள்ளத்திலும், ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே -