|
அன்பன் - பாணபத்திரனது,
துனி வரும் பழங்கண் தீர்ப்பான் சுந்தரத்
தோன்றல் - துன்பத்தையும் அதனால் வந்த மெலிவையும் நீக்குவானாகிய
சோம சுந்தரக் கடவுளின், கீதம் கனிவரும் கரணை என்னும் கடலில் -
இசையாகக் கனிந்த கருணையாகிய கடலில், அன்பு என்னும் ஆற்றில் -
அன்பாகிய ஆற்றோடு, பனி வரும் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட - குளிர்ந்த
ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் பாய, இன்பத்து ஆழ்ந்தார் - இன்பத்தில்
ஆழ்ந்தனர்.
முனிவு
- வெறுப்பு. இறைவன் அனாதி முத்தனாகலின் சீவன் முத்தரை
ஆதி முத்தர் என்றார்; தவத்தர் முத்தர் சித்தர் ஆதியானவர்கள் என்றுமாம்.
பழங்கண் - மெலிவு. தீர்க்கும்படி சுந்தரத் தோன்றல் பாடிய என
விரித்துரைத்தலுமாம். கடலில் ஆற்றாலே செவள்ளம் பாய; கடலிற் செல்லும்
ஆற்றிலே வெள்ளம் பாய என்றுமாம். (40)
ஊடிவே றொதுங்கித்
துன்ப வுவரியுட் குளித்தார் தம்மிற்
கூடிவே றற்ற வின்பக் குளிர்கடல் வெள்ளத் தாழ்ந்தார்
நாடிவே றிடைப்பி ரிந்தார் மேன்மன நடாத்தி மேனி
வாடிவே ளலைப்பச் சோர்ந்து மம்மர்நோ யுழந்தார் மண்ணோர்.
|
(இ
- ள்.) மண்ணோர் - நிலவுலகிலுள்ளவருள், ஊடி வேறு ஒதுங்கி -
பிணங்கி வேறாக ஒதுங்கி, துன்ப உவரியுள் குளித்தார் - துன்பக் கடலுள்
மூழ்கிய மகளிர், தம்மில் கூடி வேறு அற்ற இன்பக் குளிர் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தார் - தாமாகவே தலைவர்களைக் கூடி வேறில்லாத இன்பமாகிய
குளிர்ந்த கடல் வெள்ளத்துள் ஆழ்ந்தார்கள்; நாடி வேறு இடைப் பிரிந்தார்
மேல் மனம் நடாத்தி - தலைவரைப் பிரிந்த மகளிர்) பொருள் முதலியவற்றை
நாடி மறுபுலத்துப் பிரிந்து சென்ற தலைவர் மேல் மனத்தைச் செலுத்தி, வேள்
அலைப்ப - மன்மதன் வருத்துதலைச் செய்ய, மேனி வாடி சோர்ந்து - உடல்
வாடி உள்ளஞ் சோர்ந்து, மம்மர் நோய் உழந்தார் - காம நோயால்
வருந்தினார்கள்.
வேறு
வாயிலின்றி என்பார் 'தம்மில்' என்றார். வேறற்ற - உடம்பு
ஒன்றாய. பிரிந்த மகளிர் என வருவிக்க. ஊடின ஆடவரும் மகளிரும்
என்றும், பிரிந்த ஆடவரும் மகளிரும் என்றும் பொதுவாக உரைத்தலுமாம்.
(41)
பைத்தலை விடவாய் நாகம் பல்பொறி மஞ்ஞை நால்வாய்
மத்தமா னரிமான் புல்வாய் வல்லிய மருட்கை யெய்தித்
தத்தமா றறியா வாகித் தலைத்தலை மயங்கிச் சோர
இத்தகை மாவும் புள்ளு மிசைவலைப் பட்ட வம்மா. |
(இ
- ள்.) பைத்தலை விடவாய் நாகம் பல்பொறி மஞ்ஞை -
படத்தையுடைய தலையையும் நஞ்சு பொருந்திய வாயினையுமுடை
பாம்புகளும் பல பொறிகளையுடைய மயில்களும், நால்வாய் மத்தமான்
அரிமான் - தொங்குகின்ற வாயினையும் மத மயக்கத்தையுமுடைய
யானைகளும் சிங்கங்களும், புல்வாய் வல்லியம் - மான்களும் புலிகளும்,
|