II


390திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இத்தகை மாவும் புள்ளும் - இங்ஙனம் ஒன்றுக்கொன்று பகைமையுடைய
ஏனைய விலங்குகளும் பறவைகளும், மருட்கை எய்தி - இசையால் மயங்கி,
தத்தம் மாறு அறியாவாகி - தம் தம் பகைமையை அறியாவாய், தலைத்
தலை மயங்கிச் சோர - இடங்கள் தோறும் ஒன்றோடொன்று கலந்து
சோர்ந்து; இசை வலைப்பட்ட - இசையாகிய வலையின்கட்பட்டன.

     பாம்புக்கு மஞ்ஞையும் யானைக்குஞ் சிங்கமும் மானுக்குப் புலியும்
பகையாவன. இங்ஙனம் பகையான விலங்குகளும் பறவைகளும் இசையால்
மருட்கையெய்தினமையால் தம் பகைமையறிய மாட்டாமல் ஒன்றோடொன்று
விரவிச் சோர்ந்து நின்றன என்றார். சோர்தல் - ஒன்றின் மீது ஒன்று
சாய்தலுமாம். சோர - சோர்ந்து; சோரும்படி என்றுமாம். மாவும் புள்ளும்
வலைப்பட்டன என்பது நயமுடைத்து. அம்மா, வியப்பிடைச் சொல். (42)

வன்றரை கிழிய வீழ்போய் வான்சினை கரிந்து நின்ற
ஒன்றறி மரங்க ளெல்லாஞ் செவியறி வுடைய வாகி
மென்றளி ரீன்று போது விரிந்துகண் ணீருஞ் சோர
நன்றறி மாந்தர் போல நகைமுக மலர்ந்த மாதோ.

     (இ - ள்.) வன்தரை கிழிய வீழ்போய் - வலிய நிலம் பிளக்குமாறு
விழுது வீழ்த்தி, வான் சினை கரிந்து நின்ற - பெரிய கிளைகள் உலர்ந்து
நின்ற, ஒன்று அறிமரங்கள் எல்லாம் - ஊறு என்னும் ஓரறிவுடையவாகிய
மரங்கள் அனைத்தும், செவி அறிவு உடையவாகி - ஓசையறி வினையு
முடையனவாய், மென்தளிர் ஈன்று - மெல்லிய தளரினை ஈன்று, போது
விரிந்து - பூக்கள் மலர்ந்து, கண்ணீரும் சோர - கண்ணீரும் பொழிய,
நன்று அறிமாந்தர் போல - தமக்கு உறுதியாவன அறிந்த மக்களைப் போல,
நகைமுகம் மலர்ந்த - நகையொடு முகமலர்ந்தன.

     வீழ் - விழுது. ஒன்று அறி - ஊறு என்னும் ஒன்றனையே அறியும்;

"ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே"

என்பது தொல்காப்பியம். செவியறிவு - ஐந்தாவதாகிய ஓசையை அறியும்
அறிவு. இசை செவியால் அறியப்படுவதாகலின் அதற்கேற்பச்
செவியறிவுடையவாகி என்றார். ஓரறிவுடையதன் மேலும் கரிந்தும் போன
மரங்கள் செவியறிவுடையன போல இசையையேற்றுத் தளிர்த்து
அவ்வளவேயன்றி மனத்தால் நன்றினையறியும் மக்கள் போலக் கண்ணீர்
சொரிந்து முக மலர்ந்தன என வியந்து கூறினார். வற்றல் மரமானது
தளிரீன்று அரும்பிப் போதாகி மலர்ந்து தேனுஞ் சிந்திற்றென்றால் இசையின்
பெருமையை யாரால் இயம்பலாகும். மரத்திற்குக் கள்ளாகிய நீர் எனவும்,
மாந்தர்க்கு விழிநீர் எனவும் கொள்க. மாது, ஓ : அசைகள். (43)

வாழிய வுலகின் வானோர் மனிதர்புள் விலங்கு மற்றும்
ஆழிய கரண மெல்லா மசைவற வடங்க வையன்
ஏழிசை மயமே யாகி யிருந்தன வுணர்ந்தோ ருள்ளம்
ஊழியி லொருவன் றாள்புக் கொடுங்கிய தன்மை யொத்த.