II


விறகுவிற்ற படலம்395



கண்ம லர்ந்தெழு பத்திரன் கரையிலா வுவகை
உண்ம லர்ந்தெழு மன்புகொண் டூக்கவெங் கதிரோன்
விண்ம லர்ந்தெழு முன்புபோய் விசும்பிழி கோயிற்
பண்ம லர்ந்தநான் மறைப்பொரு ளடித்தலம் பணிந்தான்.

     (இ - ள்.) கண் மலர்ந்து எழு பத்திரன் - அங்ஙனங் கண்
விழித்தெழுந்த பாணபத்திரன், கரை இலா உவகை உள் மலர்ந்து -
அளவிறந்த மகிழ்ச்சியால் அகமலர்ந்து, எழும் அன்பு கொண்டு ஊக்க -
மேலெழுந்த அன்பு தன் மயமாக்கிச் செலுத்த, வெங்கதிரோன் - வெவ்விய
கதிர்களையுடைய சூரியன், விண்மலர்ந்து எழுமுன்பு போய் - வானிலே
உதித்தெழுதற்கு முன்னரே சென்று, விசும்பு இழிகோயில் - விண்ணினின்றும்
இழிந்த இந்திர விமானத்தில் எழுந்தருளிய, பண் மலர்ந்த நான் மறைப்
பொருள் - இசை நிறைந்த நால் வேதங்களின் பொருளாயுள்ள சோம சுந்தரக்
கடவுளின், அடித்தலம் பணிந்தான் - திருவடிகளை வணங்கினான். (53)

கடிய கானகம் புகுதவோ கட்டிய விறகை
முமடியி லேற்றவோ முண்டகத் தாள்கணொந் திடவந்
தடிய னேன்பொருட் டடாதசொற் பகரவோ வஞ்சக்
கொடிய னேன்குறை யிரந்தவா விளைந்ததே குற்றம்.

     (இ - ள்.) கடிய கானகம் புகுதவோ - கொடிய காட்டின்கண்
செல்லவோ, கட்டிய விறகை முடியில் ஏற்றவோ - கட்டப்பட்ட விறகு
சுமையைத் திருமுடியில் ஏற்றுதற்கோ, முண்டகத் தாள்கள் நொந்திட வந்து -
தாமரை மலர் போன்ற திருவடிகள் நோவுமாறு நடந்து வந்து, அடியனேன்
பொருட்டு - அடியேன் நிமித்தம், அடாத சொல் பகரவோ - தகாத
சொல்லைக் கூறுதற்கோ, வஞ்சக் கொடியனேன் குறையிரந்தவா -
வஞ்சகத்தையுடைய கொடியேன் குறையிரந்தபடி, குற்றம் விழைந்ததே -
அதனால் அடியேனுக்குப் பெரும் பிழை விளைந்து விட்டதே (இதற்கு என்
செய்வேன்).

     கொடியனேன் குறையிரந்தது அடியேன் பொருட்டுப் புகுதவோ
ஏற்றவோ பகரவோ என இரங்கினான் என்க. (54)

நெடிய னேமுதல் வானவர் நெஞ்சமுஞ் சுருதி
முடிய னேகமுங் கடந்தநின் முண்டகப் பாதஞ்
செடிய னேன்பொருட் டாகவிச் சேணிலந் தோய்ந்த
அடிய னேற்கெளி தாயதோ வையநின் பெருமை.

     (இ - ள்.) நெடியனே முதல் வானவர் நெஞ்சமும் - திருமால்
முதலிய தேவர்களின் உள்ளங்களையும், சுருதி முடி அனேகமும் கடந்த -
எண்ணிறந்த வேதங்களின் முடிகளையுங் கடந்தருளிய, நின் முண்டகப்
பாதம் - தேவரீரது தாமரை மலர் போன்ற திருவடிகள், செடியனேன்
பொருட்டாக - பாவியேன் பொருட்டாக, இச்சேண்நிலம் தோய்ந்த -
இந்தப் பெரிய