|
என்று திருவாசகம்
கூறுதல் காண்க. அரும்பொருள் என்பதற்கு அணு
என்றுரைத்து, அணுவுக் கணுவாயது என்பாரு முளர்; அது சிறப்பின்றாதல்
உணர்க. 'பாதாள மேழினுங் கீழ் பாதமலர்' என்பதனால் முடி
அண்டமனைத்துங் கடந்ததென்பது பெறப்படுதல் காண்க. (57)
என்ன வந்தனை
செய்துநின் றேத்தியங் கயற்கண்
மின்ன மர்ந்தபங் கொருவனை வலங்கொடு மீண்டு
மன்னர் தம்பிரா னாகிய வரகுண தேவன்
தன்னை வந்தடி பணிந்தனன் றந்திரிக் கிழவோன். |
(இ
- ள்.) என்ன - என்று, வந்தனை செய்து நின்று ஏத்தி - வணங்கி
நின்று துதித்து, அங்கயற்கண் மின் அமர்ந்த பங்கு ஒருவனை - அங்கயற்
கண்ணம்மை அமர்ந்த பாகத்தையுடைய சோம சுந்தரக் கடவுளை, வலங்
கொடு மீண்டு - வலஞ்செய்து திரும்பி, மன்னர் தம்பிரானாகிய வரகுண
தேவன் தன்னை - மன்னர் மன்னனாகிய வரகுண தேவனை, தந்திரிக்
கிழவோன் - யாழுக்குரிய பாணபத்திரன், வந்து அடி பணிந்தனன் - வந்து
வணங்கினான். மின் - மின்போல்வாள். தந்திரி
- நரம்பு : யாழுக்கு
ஆகுபெயர். (58)
வந்த வேழிசைத்
தலைமகன் வரவறிந் தரசன்
அந்த வேழிசைக் கிழவனை யழையென வுழையோர்
பந்த யாழ்மக னிருக்கைபோய்ப் பார்த்தனர் காணார்
சிந்தை யாகுல மடைந்தவன் போனவா தெரியார்.* |
(இ
- ள்.) வந்த ஏழ்இசைத் தலைமகன் வரவு - அங்ஙனம் வந்த
ஏழிசையிலும் வல்ல பாணபத்திரனது வருகையை, அரசன் அறிந்து - வரகுண
பாண்டியன் தெரிந்து, அந்த ஏழ் இசைக் கிழவனை அழை என - (வட
புலத்தினின்றும் வந்த) அந்த ஏழிசை வல்ல ஏமநாதனை அழையாய் எனப்
பணிக்க, உழையோர் - ஏவலாளர், பந்தம் யாழ் மகன் இருக்கை போய் -
கட்டமைந்த யாழ்மகனாகிய ஏமநாதன் இருப்பிடஞ் சென்று, பார்த்தனர்
காணார் - பார்ததுக் காணாது, சிந்தை ஆகுலம் அடைந்து அவன் போனவர்
தெரியார் - மனம் வருந்தி அவ்வேமநாதன் போன விதத்தைத்
தெரியாதவர்களாய்.
அழையென
ஒருவனை நோக்கிக் கூற உழையோர் பலர்
சென்றனரென்க.பந்தம் - யாழ்வலிக்கட்டு. அடைந்து போனவா என
இயையும்; அடைந்து காணார் எனினும் பொருந்தும். போனவாறு என்பது
ஈறு தொக்கது. பார்த்தனர், காணார், தெரியார் என்பன முற்றெச்சங்கள். (59)
(பா
- ம்.) * தெளியார்.
|