ஏவன் மைந்தர்போய் விளங்கிவந் திசைத்ததும் வீணைக்
காவ லன்கனா நிகழ்ச்சியு மொத்தலிற் கைக்கும்
பூவ லங்கலா னிஃதுநம் பொன்னகர்க் கூடற்
றேவர் தம்பிரான் றிருவிளை யாட்டெனத் தெளிந்தான். |
(இ
- ள்.) ஏவல் மைந்தர்போய் - ஏவலாளர் சென்று, விளங்கி வந்து
இசைத்ததும் - தெரிந்துவந்து கூறியதும், வீணைக்காவலன் கனா நிகழ்ச்சியும்
- வீணை வேந்தனாகிய பாணபத்திரனது கனா நிகழ்ச்சியும் ஒத்தலின் -
ஒத்திருத்தலால், கைக்கும் பூ அலங்கலான் - வேப்ப மலர் மாலையை
யணிந்த பாண்டியன், இஃது நம் பொன்நகர்க் கூடல் - இது நமது அழகிய
நகரமாகிய கூடலின்கண் எழுந்தருளிய, தேவர் தம்பிரான்
திருவிளையாட்டெனத் தெளிந்தான் - தேவதேவனாகிய சோமசுந்தரக்
கடவுளின் திருவிளையாடல் என்று தெளிந்தான்.
விளங்கி
என்பது விளங்க அறிந்து என்னும் பொருளில் வந்தது.
கைக்கும்பூ - கசக்கும் பூ; வேப்பம் பூ. (65)
இகழ்ந்த கூற்றெறி சேவடிக் கிடையறா நேயந்
திகழ்ந்த பத்திர னன்பையுந் தேவரைக் காப்பான்
அகழ்ந்த வாழிநஞ் சுண்டவ னருளையும் வியந்து
புகழ்ந்து போய்மது ராபுரிப் புனிதனைப் பணியா. |
(இ
- ள்.) இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு - அவமதித்து வந்த
கூற்றுவனை உதைத்த சிவந்த திருவடிக்கு, இடையறா நேயம் திகழ்ந்த -
இடைவிடாத அன்பு விளங்கிய, பத்திரன் அன்பையும் - பாணபத்திரனது
அன்பையும், தேவரைக் காப்பான் - தேவர்களைக் காக்கும் பொருட்டு,
அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் - (சகரர்) தோண்டிய கடலின்
நஞ்சினை உண்ட இறைவனது அருளையும், வியந்து புகழ்ந்து - பாராட்டிப்
புகழ்ந்து, போய் - சென்று, மதுராபுரிப் புனிதனைப் பணியா - மதுரைப்பதியி
லெழுந்தருளிய இறைவனை வணங்கி.
இகழ்ந்த
- தன்னைச் சரண் புகுந்த அடியான்மீது தன்னை மதியாது
அடர்ந்து வந்த. காப்பான் : வினையெச்சம். நஞ்சுண்டவன் என்றதனாலும்
அருளை விளக்கினார். (66)
பத்தர் யாழிசைக் கிழவனைப் பனைக்கைமா னெருத்தில்
வைத்து மாடநீ ணகர்வலஞ் செய்வித்து மலர்ந்த
சித்த மாழ்ந்திட வரிசைகண் மிதப்புறச் செய்து
தத்து மான்றொடைத் தேரினான் றன்மனை புகுவான். |
(இ
- ள்.) பத்தர் யாழ் இசைக்கிழவனை - பத்தரையுடைய யாழிசைக்கு
உரிய பாணபத்திரனை, பனைக்கைமான் எருத்தில் வைத்து - பனைபோன்ற
துதிக்கையையுடைய யானையின் பிடரில் வைத்து, மாடம் நீள்நகர் வலம்
|