|
(இ
- ள்.) கோமகன் இனையசெய்தி அறியுமேல் - மன்னவன் இச்
செய்தியை அறிவானேல் (அங்ஙனங் கருதுவதன்றி), கோசம் காப்போர்க்கு
உறுதண்டம் ஆம் - கருவூலங் காப்போர்க்கு மிக்க தண்டமும் உண்டாகும்;
(ஆதலால்), நின்போல் உன்னைப் போல், அன்பு அகத்து எம்மை வைத்த -
அன்போடு உள்ளத்தின்கண் எம்மை வைத்துள்ள, தேம் மரு போந்தின்
கண்ணிச் சேரமான் தனக்கு - தேன்பொருந்திய பனம் பூமாலையை யணிந்த
சேர மானுக்கு, இப்போது - இப்பொழுது, நாம் ஒரு முடங்கல் தீட்டி
நல்குவம் - நாம் ஓர் ஓலை எழுதிக்கொடுப்போம், போதி என்னா - நீ
அங்குப் போகக்கடவை என்று கூறி.
முடங்கல்
- திருமுகம். (9)
மறைக்குரை
செய்த வாக்கான் மதிமலி புரிசை யென்னுஞ்
சிறப்பியல் சீர்சால் செய்யுட் பாசுரஞ் செப்பித் தீட்டிப்
பிறைச்சடைப் பெருமானல்கி மறைந்தனன் பெரும்பாண் செல்வன்
உறக்கநித் தாடிப் பாடி யுவகைமா கடலி லாழ்ந்தான். |
(இ
- ள்.) மறைக்கு உரைசெய்த வாக்கால் - வேதத்துக்குப்
பொருளருளிச் செய்த திருவாகினால், மதிமலி புரிசை என்னும் - மதி
மலிபுரிசை என்னு முதலையுடைய, சிறப்பு இயல் சீர்சால் - சொற் பொருட்
சிறப்புடைய விழுப்பமிக்க, செய்யுள் பாசுரம் செப்பி தீட்டி - செய்யுளாகும்
திருப்பாசுரம் ஒன்றினைக் கூறி அதனை எழுதி, நல்கி - சொடுத்தருளி,
பிறைச்சடைப் பெருமான் மறைந்தனன் - பிறையினை யணிந்த
சடையையுடைய இறைவன் மறைந்தருளினான்; பெரும்பாண் செல்வன் -
பெருமையுடைய இசையாகிய செல்வத்தையுடைய பாண பத்திரன், உறக்கம்
நீத்து - துயிலினின்றும் நீங்கி, ஆடிப்பாடி - ஆனந்தக்கூத்தாடிப் பாடி,
உவகைமா கடலில் ஆழ்ந்தான்; உவகை என்னும் பெரிய கடலுள்
அமிழ்ந்தினான்.
திருமுகப்பாசுரம்
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை
அன்னம் பயில்பொழி லால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பால் யாழ்வல பாண பத்திரன்
தன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே" |
என்பது.
வரிச்சிறகு, சிவன்யாம், ஒருமையினுரிமையின், யாழில்,
தன்போலெம்பால் என்பன பாசுரத்தின் பாடபேதங்கள். இது 11-ஆம்
திருமுறையில் முதலதாகவுள்ளது.
|