|
(இ
- ள்.) அலை கடல் நெடுந்துகில் - அலைக்கின்ற நெடிய
கடலினை ஆடையாகவுடைய, அந்த நாடு எனும் தலைமகள் தனக்கு - அந்த
நாடு என்கின்ற தலைவிக்கு, வான் தடவு குன்று - விண்ணினை அளாவிள
மலைகள், பூண்முலை என விளங்கின - அணிகளையுடைய கொங்கைகள்
போல விளங்கின; திருவஞ்சைக்களம் - திருவஞ்சைக்களம் என்னும் பதி,
முகத்தில் தீட்டிய திலகமே ஆனது - அம்மாதின் முகத்தில் இட்ட திலகமே
போன்று விளங்கியது.
பூண்முலையும்
திலகமும் மகளிர்க்கு இன்றியமையாச் சிறப்பினவாதல்
உணர்க. (13)
அறமக ளாக்கமு மலரின் மேயசெந்
நிறமக ளாக்கமு நீதி சான்றபோர்
மறமக ளாக்கமும் வடசொற் றென்கலைத்
திறமக ளாக்கமுஞ் சிறந்த தந்நகர்*. |
(இ
- ள்.) அறமகளாக்கமும் - அறமகளாலாய தருமச்செல்வமும்,
அலரில்மேய செந்நிறமகள் ஆக்கமும் - தாமரை மலரில் வசிக்குந் திரு
மகளாலாய பொருட் செல்வமும், நீதிசான்ற போர் மறமகள் ஆக்கமும் -
நீதியமைந்த போருக்குரிய கொற்றவையாலாய வீரச்செல்வமும். வட சொல்
தென்கலைத் திறமகள் ஆக்கமும் - வடமொழி தென்மொழி யென்னும்
பகுப்பினையுடைய கலைமகளாலாய கல்விச் செல்வமும், சிறந்தது அந்நகர் -
சிறக்கப்பெற்றது அந்நகரம்.
அறமகள்
- தருமதேவதை. செந்நிறமகள் - செய்யாள்; இலக்குமி.
நீதியுடன் கூடாத போர் வென்றி வீரமாகாதென்பார் நீதிசான்ற போர்
என்றார். ஆக்கம் - ஆகியது. (14)
மண்புக ழந்நகர் மறுகின் மாடொரு
தண்புனற் சாலையிற் சார்ந்து ளானிப்பால்
விண்புகழ் நீதியவ் வேந்தற் கன்றிராக்
கண்புனை நுதலினார் கனவிற் றோன்றினார். |
(இ
- ள்.) மண்புகழ் அந்நகர் மறுகின் மாடு - புவி முழுதும் புகழும்
அந்த நகரின் வீதியின்கண், ஒரு தண்புனல் சாலையில் சார்ந்துளான் - ஒரு
தண்ணீர்ப் பந்தரிற் றங்கினன்; இப்பால் - இப்புறம், விண் புகழ் நீதி
அவ்வேந்தற்கு - வானுலகும் புகழும் நீதியினையுடைய அச் சேர வேந்தற்கு,
அன்று இரா - அன்று இரவில், கண்புனை நுதலினார் கனவில் தோன்றினார்
- கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவர் கனவிலே தோன்றியருளினார்.
மலைநாடு
நண்ணினபத்திரன் அஞ்சைக்களத்து மறுகிலே தண்ணீர்ப்
பந்தலிற் சார்ந்திருந்தனன் என்க. மண், விண் என்பன ஆகுபெயர்கள். (15)
(பா
- ம்.) * சிறந்தவந்நகர்.
|