|
மகிழ்ந்தனன் - குளிர்ந்த
தேனைக் கண்டு வண்டு மகிழ்வது போல
மகிழ்ந்தான்.
மகிழ்ந்தனன்
என்பதொழிந்த ஏனைள முற்றுக்களெல்லாம் எச்ச மாயின;
முற்றாகவே நிறுத்தித் தனித்தனி முடித்தலுமாம், வருஞ்செய்யுளிலும் இங்ஙனங்
கொள்க. (21)
வாங்கினன் றிருமுக மலர்க்க ணொற்றினன்
தாங்கினன் முடிமிசைத் தாமம் போன்மகிழ்
தூங்கினன் றடங்கணீர் துளிப்ப மெய்யெலாம்
வீங்கினன் பொடிப்பெழ வேந்தர் வேந்தனே. |
(இ
- ள்.) வேந்தர் வேந்தன் - மன்னர் பெருமானாகிய சேரமான்,
திருமுகம் வாங்கினன் - திருமுகத்தினை ஏற்று, மலர்க்கண் ஒற்றினள் - மலர்
போன்ற கண்களில் ஒற்றி, முடிமிசை தாமம் போல் தாங்கினன் - தலையின்
மேல் மாலைபோல் தாங்கி, மகிழ்தூங்கினன் - மகிழ்ச்சிமிக்கு. தடம் கண்
நீர்துளிப்ப - பெரிய கண்களினின்றும் ஆனந்த வருவி சொரியவும், மெய்
எலாம் பொடிப்பு எழ - உடல் முழுதும் புளகம் போர்ப்பவும், வீங்கினன் -
பூரித்தான்.
பொடிப்பு
- மயிர் முகிழ்ப்பு. திருத்தொண்டர் புராணத்தில்
இவ்வரலாறு கூறு மிடத்துள்ள,
"அடியேன் பொருளாத்
திருமுகங்கொண்
டணைந்த தென்ன வவர்தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் விழுந்தயர்வார்" |
என்னுஞ்செய்யுள் இங்கு
நோக்கற்பாலது. (22)
|
[எண்
சீரடியாசிரிய விருத்தம்]
|
மின்னவிருஞ்
செம்பொன்மணி மாடக் கூடன்
மேயசிவன் யாமெழுதி விடுக்கு மாற்றம்
நன்னர் முகி லெனப்புலவர்க் குதவுஞ் சேர
நரபாலன் காண்கதன்போ னம்பா லன்பன்
இன்னிசையாழ்ப் பத்திரன்றன் மாடே போந்தா
னிருநிதியங் கொடுத்துவர விடுப்ப தென்னத்
தென்னர்பிரான் றிருமுகத்தின் செய்தி நோக்கிச்
சேரர்பிரான் களிப்பெல்லை தெரியா னாகி.
|
|